அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் துவக்கப்பள்ளி வளாகத்தில், இம்மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் - நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
இம்முகாமில் விபரங்களைப் பதிவு செய்திட, 16ஆவது வார்டு பொதுமக்களுக்கு வழிகாட்டும் நோக்குடன், அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாபுத்தீன் தலைமையில், ஜெ.ஏ.லரீஃப், ரிஸ்வான் சங்க நிர்வாகி உமர் ஒலி உளளிட்டோர், தைக்கா தெரு தென்முனையிலுள்ள ஸஃபா மர்வா அலுவலக வளாகத்தில் வழிகாட்டுப் பணிகளைச் செய்தனர்.
|