மாவட்ட சுகாதாரத் துறை ஒருங்கிணைப்பில், பிறந்து 6 மாதம் நிறைவுற்றது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து புகட்டும் பணி, வீடு வீடாகச் சென்றும், ஆங்காங்கே முகாம்கள் மூலமாகவும் காயல்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
இம்மாதம் 23ஆம் தேதி திங்கட்கிழமையன்று (நேற்று) காயல்பட்டினம் தீவுத் தெரு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து புகட்டப்பட்டது.
இன்று, காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம், நெசவு ஜமாஅத் ஆகிய பொதுநல அமைப்புகளின் அலுவலக வளாகங்களில் முகாம்கள் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.
இம்மாதம் 26ஆம் தேதி வியாழக்கிழமையன்று காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி நூலக வளாகத்திலும், 27ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று தேங்காய் பண்டக சாலையிலும் முகாம் நடைபெறவுள்ளது.
முகாம் பணிகளை, டாக்டர் ராணி டப்ஸ் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மதன், மருத்துவ அலுவலர் ரோகித், சமூக சுகாதார செவிலி கந்தம்மாள், கிராம சுகாதார செவிலி பொன் பாக்கியத்தாய் மற்றும் சுகாதார அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
தகவல்:
K.M.N.மஹ்மூத் லெப்பை
தலைவர்
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு
கள உதவி:
M.புகாரீ
அப்பா பள்ளித் தெரு |