55 உறுப்பினர்களைக் கொண்ட காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக வரும் அக்டோபர் மாதம் 13ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 10.00 மணிக்குத் துவங்கி, மாலை 04.00 மணி வரை வேட்பு மனு தாக்கல், பள்ளியின் முதல் தளத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் திருநெல்வேலி மண்டல கண்காணிப்பாளர் வஸீர் அஹ்மத், தூத்துக்குடி வக்ஃப் ஆய்வாளர் செய்யித் வாஜித் ஆகியோர் விண்ணப்பதாரர்களிடமிருந்து வேட்பு மனுக்களைப் பெற்றுக்கொண்டனர்.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத் பொதுக்குழு உறுப்பினர்கள் போட்டியிடத் தகுதியுள்ள இத்தேர்தலில், 68 பொதுக்குழு உறுப்பினர்கள், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். துவக்கம் முதல் இறுதி வரை வேட்பு மனு தாக்கல் அமைதியாக நடைபெற்றது.
வேட்பு மனு படிவத்தின் மாதிரி:-
|