மனித உரிமைகள் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், இம்மாதம் 22ஆம் தேதியன்று காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று (22/09) மாலை 5:45 மணியளவில் காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மனித உரிமைகள் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் திரு.டி.ஜே.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் திரு.ரமேஷ், மேற்கு மாவட்ட செயலாளர் திரு.ஜெயபால் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் ஜனாப்.எம்.ஏ.ஜமாலுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
நிகழ்வின் துவக்கமாக தெற்கு மாவட்ட செயலாளர் ஜனாப்.எம்.ஏ.ஜமாலுத்தீன் அனைவரையும் வறவேற்றார். அதனைத் தொடர்ந்து, மேற்கு மாவட்ட செயலாளர் ஆசிரியர் திரு.ஜெயபால், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் திரு.ரமேஷ் மற்றும் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் திரு.டி.ஜே.கார்த்திகேயன் ஆகியோர் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சகோ.கரீம் (எ) சமீம், தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் சகோ.எம்.எம்.மொஹூதூம், மேற்குமாவட்ட அமைப்பாளர் திரு.அமர்சிங், மேற்கு மாவட்ட பொருளாளர் சகோ.காதிக்குல் அமீன், காயல்பட்டின நகர தலைவர் எம்.ஜஹாங்கிர், நகர செயலாளர் சகோ.எல்.டி.எஸ்.சித்தீக் உட்பட சுமார் 40 நபர்கள் கலந்து கொண்டார்கள்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 08:09 / 26.09.2013] |