ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், இம்மாதமத் 28ஆம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள காயலர்களுக்கு அழைப்பு விடுத்து அம்மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஷாஹுல் ஜிஃப்ரீ காரீம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அன்பின் ஐக்கிய ராஜ்ஜியம் வாழ் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நமது ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் எட்டாவது பொதுக்குழுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 28ஆம் தேதி, லண்டன் புறநகர பகுதியான பேர்லி மாநகரில் அமைந்துள்ள சர்ச் ஹால் உள்ளரங்கில் காலை 10.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
Church Hall
Near Mulgrave Paintings (Inside the alley way)
20 Lower Road
Kenley
CR8 5NB
இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தை மேலும் மெருகூட்டும் வகையில் நமது மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும்
பல்வேறு அணிகளுக்கான வினாடி-வினா போட்டி,
நம் தாயகமாம் காயல்பட்டினம் நகரின் மரபுச் சொல் போட்டி,
குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்,
ஆண்கள் - பெண்களுக்கான ‘120 வினாடி தொடர் பேச்சுப்போட்டி,
மருத்துவர்களின் கேள்வி - பதில் நிகழ்ச்சி,
வெளிப்புற விளையாட்டுப் போட்டிகள் (outdoor games)
உள்ளிட்ட பல்சுவை போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்றம் துவக்கபட்டது முதல் இன்று வரையுள்ள மன்ற செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விளக்கப்படவுள்ளது.
இயந்திரத்தனமான நகர வாழ்க்கையின் பரபரப்பை மறந்து மகிழ்வுற்றிருப்பதற்காக, இந்த அரிய வாய்ப்பை மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு அத்தேதியில் உங்களின் அனைத்து சொந்த வேலைகளுக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு, கூட்டத்தில் முழுமையாகக் கலந்து மகிழவும், மகிழ்விக்கவும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இப்பொதுக்குழுவின் உள்ளூர் பிரதிநிதியாக மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் நூஹு நியாஸ் அவர்கள் செயல்படுவார்கள் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.
உங்கள் யாவருக்கும் கருணையுள்ள அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்...
நம் மன்றத்தின் இணையதளத்தை WWW.KAYALPATNAM.ORG.UK என்ற முகவரியில் காணலாம்...
இவ்வாறு, ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் செயற்குழு உறுப்பினர் ஷாஹுல் ஜிஃப்ரீ கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |