உலக காயல் நல மன்றங்கள், நகர்நல அமைப்புகள் மற்றும் கல்வியார்வலர்களின் அனுசரணையுடன், ஆண்டுதோறும் பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ரா, கல்விச் சங்கம் - ஆண்டுக்கு ரூ.5,000 வீதம், 3 ஆண்டுகளுக்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 4 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என, கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதியன்று, காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியருகில், ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தால் நடத்தப்பட்ட விழாவின்போது அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், 4 மாணவர்களின் கல்வி உதவிக்கான முதலாண்டு தொகை 20,000 ரூபாயை, இக்ரா, கல்விச் சங்க அலுவலகத்தில், இம்மாதம் 08ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 08.30 மணியளவில், ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் உள்ளூர் ஒருங்கிணைப்பாளர் தோல்சாப் முஹம்மத் மூஸா நெய்னா, அதன் உறுப்பினர் முஹம்மத் அலீ ஸாஹிப் ஆகியோரிணைந்து வழங்க, இக்ரா, கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் அதனைப் பெற்றுக்கொண்டார்.
பெங்களூரு காயல் நல மன்ற நிர்வாகி கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் இந்நிகழ்வின்போது உடனிருந்தார்.
ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் கடந்தாண்டு, இக்ராஃ கல்விச் சங்கத்திடம் கல்வி உதவித்தொகை அனுசரணை வழங்கப்பட்ட செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |