காயல்பட்டினம் நகர்மன்ற பிரதான கட்டிடம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது. பஞ்சாயத் தகுதியில் இருந்தப்போது கட்டப்பட்ட இந்த கட்டிடம்,
தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது.
இக்கட்டிடத்தை புதுப்பிக்க தமிழக அரசு நடப்பு பட்ஜெட்டில் (2013-14), காயல்பட்டினம் நகராட்சிக்கு -
உள்கட்டமைப்பு மற்றும் இயக்குதல் & வெற்றிடம் நிரப்புதல் (INFRASTRUCTURE GAP FILLING FUND) நிதியில் இருந்து, 1.5 கோடி ரூபாய்
ஒதுக்கியுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கான நிர்வாக அனுமதியும் (ADMINISTRATIVE SANCTION) - சென்னை நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர்
(CMA) அலுவலகத்தில் இருந்து வழங்கபட்டுள்ளது.
இப்பணிக்கு விரிவான திட்ட மதிப்பீடு (DETAILED ESTIMATE) மற்றும் வடிவமைப்பு (DESIGN) போன்றவற்றை தயார் செய்ய தகுதியான
கலந்தரிதற்குரியர் (CONSULTANT) நிறுவனத்திடம் ஒப்பந்தப்புள்ளி கோரி ஆகஸ்ட் 30 தேதிய தினத்தந்தி நாளிதழில் - காயல்பட்டினம் நகராட்சி
சார்பாக - விளம்பரம் வெளியிடப்பட்டது. ஒப்பந்தப்புள்ளிகள் செப்டம்பர் 20 வரை பெறப்படும் என்றும் விளம்பரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பணிக்குறித்த முழு விபரம் - விளம்பரம் வெளியிடப்பட்டு 18 நாட்கள் கழித்தே, நகராட்சிகளுக்கான பொதுவான டெண்டர் இணையதளத்தில்
(http://municipality.tn.gov.in/tenders/) வெளியிடப்பட்டது.
முதலில் (செப்டம்பர் 17) பதிவேற்றம் செய்யப்பட்ட விபரங்களில் இப்பணிக்கான மதிப்பீடு 1,50,000 (1 சதவீதம்) என்றும்,
மீண்டும் - திருத்தப்பட்டு - மறுநாள் (செப்டம்பர் 18) பதிவேற்றம் செய்யப்பட்ட விபரங்களில் இப்பணிக்கான மதிப்பீடு 3,00,000 (2 சதவீதம்) என்றும்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் - செப்டம்பர் 20 அன்று மாலை நகராட்சியில் திறக்கப்பட்டது. நான்கு நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பித்ததாக தெரிகிறது.
அதில் திருநெல்வேலியை சார்ந்த ஒரு நிறுவனம் ரூபாய் 1,00,000 க்கு ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பித்துள்ளது என தெரிகிறது. இதர மூன்று
நிறுவனங்கள் - ரூபாய் 2,80,000 முதல் ரூபாய் 3,00,000 வரை ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 7:50 am / 22.09.2013] |