ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் 16ஆவது செயற்குழுக் கூட்டத்தில், வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று அம்மன்றத்தின் 03ஆவது பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 16ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அஸ்ர் தொழுகைக்குப் பின், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் டாக்டர் செய்யித் அஹ்மத் இல்லத்தில், செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.முஹம்மத் உமர் தலைமையில் நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
‘ஷிஃபா’ அமைப்பு ஓர் அறிமுகம்:
மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைத்து அண்மையில் துவக்கப்பட்ட ‘ஷிஃபா’ அமைப்பின் நடவடிக்கைகள், தற்போதைய அமைப்பாளர்கள், அங்கம் வகிக்கும் மருத்துவர்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து, அதன் துவக்க விழாவில் கலந்துகொண்ட மன்றத்தின் துணைச் செயலாளர் ஹுபைப் விரிவாக விளக்கினார்.
மைக்ரோ காயலின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் பி.எம்.ஹுஸைன் நூருத்தீன் விளக்கிப் பேசினார்.
3ஆவது பொதுக்குழு:
மன்றத்தின் 3ஆவது பொதுக்குழுவை, இன்ஷாஅல்லாஹ் - எதிர்வரும் நவம்பர் 15ஆம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டு, கே.வி.எஸ்.ஏ.ஹபீப் முஹம்மத் தலைமையில் அதற்கான பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு - பொறுப்புகள் அவர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது.
மன்ற உறுப்பினர்களை நேரில் சந்திக்க சிறப்புக் குழு:
மன்றத்தை வலுவுற செயல்படச் செய்திடும் பொருட்டு, அதன் செயல்பாடுகள், செய்யவிருக்கும் திட்டங்கள், தாயகம் காயல்பட்டினத்தின் அவசியத் தேவைகள், நிதி நிலைமை, சந்தாவின் அவசியம் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனைகள் உள்ளிட்டவற்றை - அனைத்து உறுப்பினர்களின் இல்லம் தேடிச் சென்று சந்தித்து, நேரில் பகிர்ந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டு, அதற்காக பின்வருமாறு செயற்குழு உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது:-
1. மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ
2. ஜனாப். சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத்
3. ஜனாப். வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை
4. ஜனாப். கே.வி.எஸ்.ஏ.ஹபீப் முஹம்மத்
5. ஜனாப். கே.ஹுபைப்
6. ஜனாப். நோனா கே.அபூஹுரைரா
7. ஜனாப். ஏ.எம்.அப்துல் ஜப்பார்
அடுத்த செயற்குழுக் கூட்டம்:
மன்றத்தின் 17ஆவது (அடுத்த) செயற்குழுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ் வரும் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என மன்றத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ அறிவிக்க, செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத் |