காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 99 மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி இன்று காலையில் வினியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பள்ளி அமைந்துள்ள 13ஆவது வார்டின் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, விலையில்லா மிதிவண்டி வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், உதவி தலைமையாசிரியர் டேவிட் செல்லப்பா, பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர்களான எல்.கே.லெப்பைத்தம்பி, எல்.டி.இப்றாஹீம், சமூக ஆர்வலர் எல்.எம்.இ.கைலானீ ஆகியோர் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.
இப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 137 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துவக்கமாக வரப்பெற்ற 99 மிதிவண்டிகள் மாணவர்களுக்கு முதற்கட்டமாக வினியோகிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|