சிரிய நாட்டின் மீதான அமெரிக்காவின் தாக்குதல் திட்டம், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, எரிபொருள் விலை உயர்வு, மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய மசோதா உள்ளிட்ட சர்வதேச மற்றும் தேசிய பிரச்சினைகளையும்,
சீரான குடிநீர் வினியோகம், பழுதடைந்த சாலைகளை சரிசெய்தல், மின் வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கவுண்டர் அமைத்தல், அரசு மருத்துவமனைக்கு இரவு நேர காவலாளி - போதிய மருத்துவர்கள் - ஊழியர்களைப் பணியமர்த்தல் உள்ளிட்ட உள்ளூர் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காயல்பட்டினம் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், இம்மாதம் 19ஆம் தேதி வியாழக்கிழமை (நேற்று) மாலை 06.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
சு.நடராஜன், ஆ.பிராட்டி, எம்.நாகூர் கனி ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில், கட்சியின் நகர செயலாளர் தா.திருத்துவராஜ் தலைமையுரையாற்றினார். ஒன்றிய செயலாளர் சு.பன்னீர் செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர் செ.ரவிச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர்களான த.கலைச்செல்வி, பொன். கல்யாணசுந்தரம் மற்றும் பெ.வடிவேல், சி.சுடலைமணி, கே.அய்யப்பன், சேகர், எஸ்.மெய்தீன் ஆகியோர் உரையாற்றினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா. ரசல் இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பளராகக் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, சர்வதேச - தேசிய - உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரும் முழக்கங்களுடன் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கள உதவி & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |