உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து, அதன் துணைத்தலைவரும் - சிங்கப்பூர் காயல் நல மன்ற தலைவருமான எம்.அஹ்மத் ஃபுஆத், இம்மாதம் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 08.30 மணியளவில் நேரில் ஆய்வு செய்தார்.
நடப்பு கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக இதுவரை பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள், நடப்பு கல்வியாண்டில் சேகரிக்கப்பட்டுள்ள - கல்வி உதவித்தொகைக்கான ஜகாத் நிதி, இக்ராஃவின் அண்மைச் செயல்பாடுகள், அலுவலக நடவடிக்கைகள், இக்ராஃவுக்கு சொந்தமாக இடம் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் மற்றும் வருங்கால செயல்திட்டங்கள் குறித்து, இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது அவருக்கு தேவையான விபரங்களையும், விளக்கங்களையும் வழங்கினார்.
இக்ராஃ பொருளாளரும் - சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியுமான கே.எம்.டி.சுலைமான், இக்ராஃ துணைச் செயலாளரும் - கத்தர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியுமான எஸ்.கே.ஸாலிஹ், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
முன்னதாக, சிங்கப்பூர் காயல் நல மன்றத் தலைவர் எம்.அஹ்மத் ஃபுஆத் - இக்ராஃவின் துணைத்தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக அலுவலகத்திற்கு வருவதை முன்னிட்டு, அவருக்கு இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்
இக்ராஃ கல்விச் சங்கம்
காயல்பட்டினம். |