காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
தற்போது கடல் தெளிவாகக் காணப்படுகிறது. 20.09.2013 அன்று 18.30 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் செப்டம்பர் 19ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:... posted byV. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou)[21 September 2013] IP: 183.*.*.* China | Comment Reference Number: 30232
S K Salih காக்கா , தினமும் கடல் , மழை பற்றிய செய்தியை போடுறீங்களே . உங்களுடைய நோக்கம்தான் என்ன ?
Administrator:
(1) தினமும் கடலை படம் எடுப்பது
DCW தொழிற்சாலை - கழிவுகளை கடலில் கலப்பது குறித்து நடைபெற்ற பல ஆய்வு கூட்டங்களில், கலக்கப்படும் நாட்களில் புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தும்படி பரிந்துரைகள், வல்லுனர்களால் வழங்கப்பட்டது. கடலில் கழிவு கலக்கப்பட்டுள்ளது என்ற தகவல் - எப்போதாவது கிடைக்கும்போது படம் எடுக்க செல்வது, சில நேரங்களில் கவனக்குறைவாலும், தகவல் கிடைக்கப்பெறாததாலும் விடுப்பட்டுவிட வாய்ப்புள்ளது என்பதால், கடலை தினசரி படம் எடுக்கும் வழமையை உருவாக்கிக்கொள்வது என்று எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தினசரி கடல் படம் வெளியிடப்படுகிறது
(2) மழை தகவல்
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மழை அளவுகள் விரிவாகவும் - இதர மாவட்ட மழை அளவுகள் படம் மூலமும் செய்தி பல வாரங்களாக வெளியிடப்பட்டு வருகிறது. இச்செய்திகள் - தமிழகத்தின் முக்கிய இரு மழைக் காலங்களில் (ஜூன் - செப்டம்பர் : தென் மேற்கு பருவ மழை; அக்டோபர் - ஜனவரி : வட கிழக்கு பருவ மழை) வெளியிடப்படும். தூத்துக்குடி தகவல் - காயல்பட்டினம் அடங்கிய மாவட்டம் என்பதாலும், திருநெல்வேலி தகவல், பாபநாசம் அணை நீர்மட்டம், திருநெல்வேலி மாவட்ட மழையை பெரிதும் நம்பியிருக்கும் காரணத்தாலும் செய்தியாக வழங்கப்படுகிறது
(3) பாபநாசம் அணை விபரம்
காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்த் தேக்கத்திற்கு, பாபநாசத்தில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. நகரில் குடிநீர் விநியோகம் குறித்த செய்திகளை காயல்பட்டணம்.காம் அவ்வப்போது வெளியிட்டு வரும் பின்னணியில் - இந்த தகவலும் ஆவணப்படுத்தப்படுகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross