ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, காயல்பட்டினம் மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், வழமை போல இவ்வாண்டும் கூட்டு முறையில் உள்ஹிய்யா கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடு பங்கு ஒன்றுக்கு ரூ.2,000 என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பங்கு சேர விரும்புவோர்,
பள்ளியின் செயலாளர் ஏ.எஸ்.அஷ்ரஃப் (கைபேசி எண்: +91 94861 80173),
எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ்
ஆகியோருள் ஒருவரைத் தொடர்புகொண்டு, தமது பங்கை உறுதி செய்துகொள்ளுமாறு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புதுப்பள்ளியின் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) உள்ஹிய்யா அறிவிப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |