காயல்பட்டினம் கடலோரமாக - தென் பாக கிராம பகுதியில் - ஏறத்தாழ 47 சர்வே எண்கள் கொண்ட நிலங்கள் உள்ளன. இதில் 20 சர்வே எண்
நிலங்கள் - கடலுக்கு அடுத்ததாக உள்ளன. 27 சர்வே எண் நிலங்கள், கடலினை தொட்டு உள்ள சர்வே எண்களுக்கு அடுத்தததாக உள்ளன. இந்த
சர்வே எண்கள் அனைத்தும் - முழுமையாகவோ, ஒரு பகுதியிலோ - கடலின் உச்ச அலை எல்லையிலிருந்து (HIGH TIDE LINE) - 500 மீட்டர்
தூரத்திற்கு உட்பட்டு இருக்கலாம். அவ்வாறு இருக்கும் நிலங்களை - மத்திய அரசின் COASTAL REGULATION ZONE (CRZ) விதிகள் கட்டுப்படுத்துவதாக இருக்கும்.
கடலுக்கு அடுத்ததாக உள்ள சர்வே எண்கள் (20)
277, 278, 279, 280, 281, 318, 327, 328, 356, 362, 457, 458, 459, 460, 461, 465, 466, 467, 468 (பகுதி),
554
கடலினை தொட்டு உள்ள சர்வே எண்களுக்கு அடுத்ததாக உள்ள சர்வே எண்கள் (27)
317, 319, 320, 321, 323, 324, 326, 329, 354, 355, 357, 358, 359, 360, 361, 472, 473, 475, 476, 477, 538,
539, 549, 550, 551, 552, 553
CRZ விதிமுறைகள் குறித்து நகரில் பலருக்கு பல விதமான கண்ணோட்டங்கள் உள்ளன. இவ்விதிகள் - 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு வந்த விதிமுறைகள் என்று ஒரு சிலர் புரிந்துள்ளனர். சுனாமிக்கு முன்னர் நகர்மன்ற ஒப்புதல் வாங்கப்பட்டதால் தற்போது கட்டுமானங்கள் துவக்கலாம் என்று வேறு சிலர் புரிந்துள்ளனர்.
விதிமுறைகளை முறையாக புரியாமல் இருப்பதாலும் அல்லது தெரிந்தே விதிமுறைகளை மீறுவதாலும் - நில உரிமையாளர்களுக்கு மட்டும் அன்றி, CRZ பகுதிகளில் நிலம் வாங்கும் நடுத்தர மக்களுக்கும் - வருங்காலங்களில் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தொடர்ந்து வரும் பாகங்களில், CRZ விதிமுறைகள் குறித்தும், காயல்பட்டினம் கடலோர பகுதிகளில் நடக்கும்/நடத்த முயற்சி செய்யப்பட்ட கட்டுமானப்பணிகள் குறித்தும் காணலாம்.
[தொடரும் ...]
நகரின் பிரதான தொழில்களில் ஒன்றான வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE) குறித்த சிறப்பு பக்கம் இணையதளத்தில் உள்ளது. |