தென் ஆப்ரிக்காவின் முதல் கருப்பு இன ஜனாதிபதியும், அந்த நாட்டின் இன ஒத்துக்கிட்டு கொள்கைக்கு எதிராக போராடியவருமான நெல்சன்
மண்டேலா, நேற்று (டிசம்பர் 5) இரவு 8:50 மணியளவில், ஜொஹானஸ்பர்க் நகரில் உள்ள அவர் இல்லத்தில், காலமானார். அவருக்கு வயது 95.
ஈஸ்டர்ன் கேப் நகரில் 1918 ஆம் ஆண்டு நெல்சன் ரோலிலாலா மண்டேலா பிறந்தார். 1943 ஆம் ஆண்டு ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) அமைப்பில் சேர்ந்த அவர், தென் ஆப்ரிக்க வெள்ளையர் அரசாங்கத்தை எதிர்த்து போராட துவங்கினார். அவர் மீது - தேச துரோகம் குற்றாசாட்டினை, 1956 ஆம் ஆண்டு அந்த நாடு கொண்டு வந்தது. நான்கு ஆண்டுகள் நடந்த நீதிமன்ற விசாரணைக்கு பிறகு குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது.
தூண்டுதல் மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாடு சென்றார் போன்ற காரணங்களுக்காக நெல்சன் மண்டேலா மீண்டும் 1962 ஆம் ஆண்டு கைது
செய்யப்பட்டு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 1964 ஆம் ஆண்டு - அவர் மீது நாசவேலை செய்தார் என குற்றம்சாட்டப்பட்டு, ஆயுள்
தண்டனை வழங்கப்பட்டது. ராப்பென் தீவில் உள்ள சிறைச்சாலையில் நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டார்.
உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் - தென் ஆப்ரிக்காவில் இன ஒதுக்கீட்டு கொள்கையை மாற்றுவதற்கான முதல் படியாக, 27 ஆண்டு சிறை
வாழ்க்கைக்கு பிறகு - நெல்சன் மண்டேலா, 1990 ஆம் ஆண்டு விடுதலை ஆனார்.
புதியதாக அனைத்து இன மக்களும் கலந்துக்கொள்ளும் விதமாக அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கான நடந்துக்கொண்டிருந்த பேச்சு வார்த்தைகளுக்கு
மத்தியில் - 1993 ஆம் ஆண்டு அவருக்கும், தென் ஆப்ரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி பிரெட்ரிக் கிளெர்க்குக்கும் அமைதிக்கான நோபெல் பரிசு
வழங்கப்பட்டது.
1994 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று, தென் ஆப்ரிக்க நாட்டின் முதல் கருப்பு இன ஜனாதிபதி ஆனார் நெல்சன் மண்டேலா.
தனது முதல் ஐந்தாண்டுகள் பதவி காலம் நிறைவானதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் நிற்க மறுத்த நெல்சன் மண்டேலாவிற்கு, சுக்குரியன் புற்றுநோய் (Prostate Cancer) இருப்பதாக 2001 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு பொதுவாழ்வில் இருந்து நெல்சன் மண்டேலா ஓய்வு பெற்றார். 2010 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த உலக கால்பந்து போட்டி நிகழ்ச்சிகளில் அவர் கலந்துக்கொண்டதே, அவரின் இறுதி பொது நிகழ்ச்சிகளாகும்.
சில மாதங்களுக்கு முன் - உடல் நலன் சரியில்லாமல், மருத்துவமனையில் நெல்சன் மண்டேலா சேர்க்கப்பட்டார்.
மண்டேலாவின் மரணம் குறித்த அறிவிப்பை - அந்நாட்டின் ஜனாதிபதி ஜேகப் ஜூமா, தேசிய தொலைக்காட்சியில் - வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) அதிகாலை அறிவித்தார்.
மண்டேலாவின் மரணத்தை தொடர்ந்து - அந்நாட்டின் SOUTH AFRICAN BROADCASTING CORPORATION (SABC) தொலைகாட்சி, சிறப்பு நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பி வருகிறது. அதனை காண இங்கு சொடுக்குக |