பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதியும் தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வியாழக்கிழமை வெளியிட்டன.
மார்ச் 25 வரை நடைபெறும் பிளஸ் 2 தேர்வை சுமார் 9 லட்சம் பேரும், ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறும் பத்தாம் வகுப்புத் தேர்வை சுமார் 11 லட்சம் பேரும் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு வழக்கம்போல் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. முக்கியப் பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல் தேர்வுகளுக்கு முன்னதாக தலா 2 நாள்களும், கணிதத் தேர்வுக்கு முன்னதாக 3 நாள்களும் விடுமுறை விடப்பட்டுள்ளன.
பொதுத்தேர்வுகளில் இந்த ஆண்டு முதல் முறையாக பார்-கோடு மற்றும் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
45 நிமிடங்கள் முன்கூட்டியே தேர்வு:
இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வுகள் வழக்கத்தைவிட 45 நிமிடங்கள் முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளன.
காலை 9.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி தேர்வை முன்கூட்டியே நடத்த அரசு முடிவு எடுத்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு கால அட்டவணை
மார்ச் 3 திங்கள்கிழமை: மொழிப்பாடம் முதல் தாள்
மார்ச் 5 புதன்கிழமை: மொழிப்பாடம் இரண்டாம் தாள்
மார்ச் 6 வியாழக்கிழமை: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7 வெள்ளிக்கிழமை: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 10 திங்கள்கிழமை: இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 13 வியாழக்கிழமை: வணிகவியல், புவியியல் ஹோம் சயின்ஸ்
மார்ச் 14 வெள்ளிக்கிழமை: கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ்
மார்ச் 17 திங்கள்கிழமை: வேதியியல், கணக்குப் பதிவியல்
மார்ச் 20 வியாழக்கிழமை: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
மார்ச் 24 திங்கள்கிழமை: பொலிட்டிக்கல் சயின்ஸ், நர்சிங் (பொது), புள்ளியியல், தொழிற்படிப்புகளுக்கான எழுத்துத் தேர்வு
மார்ச் 25 செவ்வாய்க்கிழமை: கம்ப்யூட்டர் சயின்ஸ், இந்திய கலாசாரம், கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், பயோ-கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்டு லாங்குவேஜ், தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை
மார்ச் 26 புதன்கிழமை: மொழிப்பாடம் முதல் தாள்
மார்ச் 27 வியாழக்கிழமை: மொழிப்பாடம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1 செவ்வாய்க்கிழமை: ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2 புதன்கிழமை: ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4 வெள்ளிக்கிழமை: கணிதம்
ஏப்ரல் 7 திங்கள்கிழமை: அறிவியல்
ஏப்ரல் 9 புதன்கிழமை: சமூகஅறிவியல்
தகவல்:
தினமணி
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 10:40 pm / 06.12.2013] |