முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு சென்னையில் டிசம்பர் 11,12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு வரும் 11.12.2013, 12.12.2013 மற்றும் 13.12.2013 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டின் முதல் நாள் 11.12.2013 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கூட்டமும்,
12.12.2013 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான கூட்டமும் மற்றும்
13.12.2013 அன்று காவல் துறை அதிகாரிகளுக்கான கூட்டமும் தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடியிலுள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
அரசு தலைமைச் செயலாளர்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9.
|