மன்றத்தின் நடப்பு செயற்குழுவின் பொறுப்புக் காலத்தை வரும் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்து, ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுவில் தீர்மானமியற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
இறைருளால் எமது ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்ம், இம்மாதம் 01ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, ஹாஜி எம்.எம்.ஜஹாங்கீர் இல்லத்தில், மன்றத் தலைவர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதாஹிர் தலைமையிலும், ஹாஜி எம்.எல்.ஸித்தீக், ஹாஜி எஸ்.எம்.தாஹிர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
ஹாஃபிழ் ஏ.டபிள்யு.அப்துல் காதிர் புகாரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். தலைமையுரையைத் தொடர்ந்து, மன்றம் இதுவரை ஆற்றியுள்ள நகர்நலப் பணிகள் குறித்தும், உலக காயல் நல மன்றங்களின் மருத்துவத் துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’வின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட செயற்குழுக் கூட்டம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் - மன்றச் செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் விளக்கிப் பேசியதோடு, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான ‘இக்ராஃ கல்விச் சங்கம்’, மருத்துவத் துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’ ஆகிய அமைப்புகளில் ஜக்வா அங்கத்தினருள் இதுவரை உறுப்பினராகாதோர் தன்னார்வத்துடன் முன்வந்து உறுப்பினர்களாகுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
பின்னர், கருத்துப் பரிமாற்றத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. நகர்நலன் குறித்த மன்றத்தின் நடப்பு சேவைகள் மற்றும் வருங்காலத் திட்டங்கள் குறித்தும், மன்றத்திற்கு புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, நிறைவில் பின்வருமாறு தீர்மானமியற்றப்பட்டது:-
தீர்மானம்:
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் - ஜக்வா அமைப்பின் நடப்பு செயற்குழுவின் பொறுப்புக் காலத்தை, இன்ஷாஅல்லாஹ் - வரும் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிப்பது என்றும், புதிய செயற்குழுவை ஏப்ரல் 01ஆம் தேதியன்று தேர்வு செய்வதென்றும் இக்கூட்டம் ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானமியற்றப்பட்டது. எம்.ஐ.கலீலுர்ரஹ்மான் நன்றி கூற, எம்.டி.அபுல் காஸிம் ஆலிம் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு, ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |