தமிழ் மாநில தனியார் மின் பணியாளர் மத்திய சங்கத்திற்கு காயல்பட்டினத்தில் கிளை துவக்கப்பட்டு, புதிய செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
தமிழ்நாட்டிலுள்ள மின் பணியாளர்கள் (Electricians) அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுவதற்காக, தமிழ் மாநில தனியார் மின் பணியாளர் மத்திய சங்கம் என்ற பெயரில் அமைப்பு இயங்கி வருகிறது. காயல்பட்டினத்தில், அதன் கிளையைத் துவக்குவதற்கான கலந்தாலோசனைக் கூட்டம், இம்மாதம் 07ஆம் தேதி சனிக்கிழமை இரவு 19.45 மணியளவில், காயல்பட்டினம் கடற்கரையில் கூடியது.
மின் பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், அதனால் விளையவிருக்கும் நன்மைகள் குறித்தும் - இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய எம்.ஸைஃபுத்தீன் மற்றும் கே.முருகன், எம்.ஸலாஹுத்தீன் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
தமிழ்நாடு மின் பணியாளர் சங்கத்திற்கு காயல்பட்டினத்தில் கிளையைத் துவக்கி - அனைவரும் இணைந்து செயல்படுவதெனவும், புதிய செயற்குழுவைத் தேர்வு செய்வதெனவும் இக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தின் நிறைவில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - கிளை துவக்கம்:
தமிழ் மாநில தனியார் மின் பணியாளர் மத்திய சங்கத்திற்கு காயல்பட்டினத்தில் கிளையைத் துவக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 – புதிய செயற்குழு:
தமிழ்நாடு மின் பணியாளர் சங்க காயல்பட்டினம் நகர கிளையின் புதிய செயற்குழு பின்வருமாறு தேர்ந்தெடுக்கப்பட்டது:-
கவுரவ தலைவர்:
ஏ.எம்.இக்பால்
தலைவர்:
கே.எஸ்.காதர்
துணைத்தலைவர்:
நிஜார் அஹ்மத்
செயலாளர்:
கே.முருகன்
துணைச் செயலாளர்கள்:
ஹபீபுர்ரஹ்மான்
எம்.முருகன்
பொருளாளர்:
எம்.ஸைஃபுத்தீன்
செயற்குழு உறுப்பினர்கள்:
தாவூத்
எம்.ஸலாஹுத்தீன்
எம்.சுப்பிரமணியன்
வாவு
செய்யது
அருள்
கே.முனிசாமி
மகாராஜன்
காஜா மெய்தீன்
எம்.இ.எல்.புகாரி
இ.முருகன்
சுரேஷ் தர்மராஜ்
எம்.ஏ.அப்துல் ஜப்பார்
கே.எம்.காதர்
அப்துர்ரவூஃப்
மாவட்ட பிரதிநிதிகள்:
எம்.முருகன்
ஷம்சுத்தீன்
மாநில பிரதிநிதிகள்:
எம்.எம்.ஸைஃபுத்தீன்
இ.முருகன்
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு மின் பணியாளர் சங்க காயல்பட்டினம் கிளையில் உறுப்பினராவதற்காக அனைவருக்கும் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டதுடன் கூட்டம் நிறைவுற்றது.
காயல்பட்டினம் நகரில் மின் பணி செய்வோர் (எலக்ட்ரீஷியன்ஸ்) சுமார் 60 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
தகவல்:
M.ஸைஃபுத்தீன்
களத்தொகுப்பில் உதவி:
‘மெகா’ நூஹ்
[செய்தி திருத்தப்பட்டது @ 11:49 / 09.12.2013] |