மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் டெல்லி ஆகிய நான்கு மாநிலங்களுக்கான தேர்தல்கள் சமீபத்தில் நடைபெற்றது. எதிர்வரும் மே
மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவேண்டி உள்ளதால் - அதற்கு முன் நடைபெறும் சட்டசபை தேர்தல்கள் என்பதால் இவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
தேர்தலுக்கு சென்ற 4 மாநிலங்களில் இரண்டில் (டெல்லி, ராஜஸ்தான்) காங்கிரஸ் கட்சியும், இரண்டில் (மத்திய பிரதேஷ், சத்தீஸ்கர்) பி.ஜே.பி.
கட்சியும் ஆட்சியில் இருந்தது.
இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் - ராஜஸ்தான் மாநிலத்தில் பி.ஜே.பி., 199 இடங்களில் 162 இடங்கள் பெற்று பெரிய அளவிலான
வெற்றியினை பெற்றுள்ளது. இம்மாநிலத்தில் வசுந்தர ராஜ சிந்தியா முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் 21
இடங்கள் மட்டும் பெற்றுள்ளது. இது முந்தைய தேர்தலைவிட 74 இடங்கள் குறைவு.
மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள மொத்தம் 230 இடங்களில் பி.ஜே.பி. 165 இடங்கள் பெற்று வெற்றியடைந்துள்ளது. இம்மாநிலத்தில்
தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் பதவியில் தொடருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் 58 இடங்கள் மட்டும் பெற்றுள்ளது.
இது முந்தைய தேர்தலைவிட 13 இடங்கள் குறைவு.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மொத்தம் 90 இடங்களில் பி.ஜே.பி. 49 இடங்கள் பெற்று வெற்றியடைந்துள்ளது. இம்மாநிலத்தில் தற்போதைய
முதல்வர் ராமன் சிங் பதவியில் தொடருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் 39 இடங்கள் மட்டும் பெற்றுள்ளது. இது முந்தைய
தேர்தலைவிட 1 இடம் அதிகம்.
டெல்லி மாநிலத்தில் உள்ள மொத்தம் 70 இடங்களில் பி.ஜே.பி. 32 இடங்கள் பெற்று முதலில் வந்தது. இக்கட்சி தனி பெருன்பான்மை
பெறாவிட்டாலும் - இக்கட்சியின் ஹர்ஸ் வரதன் முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டில்லியில் இரண்டாம் இடத்தை ஊழல் எதிர்ப்பு இயக்கங்களின் போராட்டங்களின் வாயிலாக புதிதாக உருவாகிய ஆம் ஆத்மி கட்சி - 32 இடங்கள்
பெற்றுள்ளது. காங்கிரஸ் 8 இடங்கள் மட்டும் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது கடந்த தேர்தலை விட 35 இடங்கள்
குறைவு.
வரைப்படங்கள்:
NDTV
|