உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்த - சுமார் 400 ஆண்டு கால பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜித், 1992ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் தேதியன்று இந்துத்துவ அமைப்பினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் டிசம்பர் 06ஆம் நாளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வகைப் போராட்டங்களும், கருத்தரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்:
நடப்பாண்டு டிசம்பர் 06ஆம் தேதியான நேற்று (வெள்ளிக்கிழமை) - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நடந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆஷாத் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முகம்மது ரஃபீக், தவ்பிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக பேச்சாளர் முஸ்தபா, மாநில தலைமை செயலாளர் ஜோசப் நோலாஸ்கோ உட்பட தூத்துக்குடி மாவட்ட, மாந்கர நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம்:
மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அவ்வமைப்பின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் காதர் மைதீன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முகம்மது, மாவட்டச் செயலர் ஷேக், மாவட்ட பொருளாளர் செய்யது அலி ராஜா, மாநகர செயலாளர் அக்பர், துணைச் செயலாளர் அமீர், பொருளாளர் முகம்மது ஜான், மாவட்ட தொழிலாளர் அணிச் செயலாளர் பாட்சா, மருத்துவ அணி செயலாளர் தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் ஜாமியா பள்ளிவாசல், தெற்கு புதுத்தெரு, ரஹமத்துல்லா புரம், ஜாகீர் உசேன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |