தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம்-2023 ஆவணத்தில், குடிமக்களுக்கான சேவைகளை மின்-ஆளுமையின் கொண்டு வருவது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாக ஆணையரகம் சென்னையில் கருத்தரங்கம் நடத்தவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
நகராட்சி நிர்வாக ஆணையரகம், 126 நகராட்சிகள் மற்றும் சென்னை மாநகராட்சி தவிர இதர 9 மாநகராட்சிகளின் செயல்பாடுகளை மேற்பார்வை
செய்து ஒருங்கிணைக்கும் தலைமை அலுவலகம் ஆகும். மேற்பார்வையிடப்படும் பணிகளில் வருவாய் நிர்வாகம், நிதி மேலாண்மை,
உட்கட்டமைப்பு மேம்பாடு, நகரமைப்பு, சுகாதாரம் மற்றும் திட்டக்கழிவு மேலாண்மை போன்ற பணிகள் உள்ளடக்கியதாகும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம்-2023 ஆவணத்தில், குடிமக்களுக்கான சேவைகளை மின்-ஆளுமையின்
கொண்டு வருவது தொலைநோக்காகும். இத்தொலை நோக்கத் திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, இந்த ஆணையரகம், ஜவஉறர்லால் நேரு
தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ஒரு ஒருங்கிணைந்த மின்-ஆளுமையினை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும், ஒருங்கிணைந்த மற்றும் எளிதாகப்பட்ட சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவது இதன் குறிக்கோளாகும்.
இது நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் உற்பத்தி திறன் மற்றும் செயல்திறன் அதிகரிக்க உதவியாக இருக்கும்.
இக்குறிக்கோளை எட்ட ஏதுவாக, நகராட்சி நிர்வாக ஆணையரகம் “நகர்ப்புர உள்ளாட்சிகளுக்கான குறியீடு” என்ற தலைப்பில் மின்-ஆளுமை
வல்லுநர்களை கொண்டு “HACKATHON” எனும் கருத்தரங்கினை நடத்த உத்தேசித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னோடியான
வல்லுநர்களை ஒன்றுக் கொணர்ந்து, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் ஆளுமையினை மேம்படுத்த ஏதுவாக பொது கருத்துருவினை உருவாக்குவதே
இதன் நோக்கமாகும்.
இந்த “HACKATHON” எனும் கருத்தரங்கின் மூலம் பெறப்படும் உள்ளீடுகள், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் சேவைகளான குடிமை பணிகள்,
நகர்ப்புர சுகாதாரம் மற்றும் நலவியல், திடக்கழிவு மேலாண்மை, உடல்நலம், கல்வி மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து
செயல்படுவது போன்ற பகுதிகளில் மின்-ஆளுமையினை உருவாக்க பயன்படுத்தப்படும்.
இந்நிகழ்ச்சி ““““M/S Thought Works, Chennai” என்ற தொழில்நுட்ப பங்குதாரருடன் அண்ணா பல்கலைக் கழகத்தில் 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம்
14 மற்றும் 15 ஆகிய தினங்களில், நடத்தப்பட உள்ளது. நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படும் திட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். தகவல்கள்
http://data.gov.in என்ற அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பங்கேற்பாளர்கள் பதிவு:
http://www.thoughtworks.com/events/cma-hackathon-code-governance
அல்லது
cmahackathon@thoughtworks.com
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9. |