காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், இம்மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
அன்னாரது ஜனாஸா, அன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினத்தின் மூத்த பெருந்தகையான உவைஸ் ஹாஜியார் அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிந்த செய்தியறிந்து மிகவும் துயருற்றோம்.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் மண்ணறை - மறுமை வாழ்வுகளை சிறப்பாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை வழங்கவும், அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கு ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருளவும் இருகரமேந்திப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.M.செய்யது இஸ்மாயில்
ஹாபிழ்.S.A.C. அஹ்மது ஸாலிஹ்
ஊடகக் குழு
காயல் நல மன்றம்
ரியாத் - சஊதி அரபிய்யா |