ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இன்று (டிசம்பர் 28 சனிக்கிழமை) இரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
அவ்வமைப்பின் நகர கிளைத் தலைவர் ஏ.லுக்மான் தலைமையேற்கும் இந்நிகழ்ச்சியில், மண்டல அமைப்பாளர் மவ்லவீ ஹாஃபிழ் அலீ அக்பர் மஸ்லஹீ துவக்கவுரையாற்ற, அதனைத் தொடர்ந்து, இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் துணைத்தலைவரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் சிறப்புரையாற்றுகிறார்.
அனைவரும் கலந்துகொள்ளுமாறு, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
|