காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) சார்பில், “காயல் ட்ராஃபி” என்ற பெயரில், தூத்துக்குடி மாவட்ட அளவிலான டி20 க்ரிக்கெட் போட்டிகள், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
6ஆவது முறையாக நடைபெறும் நடப்பாண்டு போட்டிகள், “காயல் ட்ராஃபி - 2014” என்ற தலைப்பில், இம்மாதம் 27ஆம் நாளன்று துவங்கி, 2014ஆம் ஆண்டு ஜனவரி 05ஆம் நாள் வரை நடைபெறுகிறது.
ரமேஷ் ஃப்ளவர்ஸ் க்ரிக்கெட் க்ளப்,
செகண்ட்ஸ் க்ரிக்கெட் க்ளப் - ஏ.,
செகண்ட்ஸ் க்ரிக்கெட் க்ளப் - பி.,
வ.உ.சி. லெவன்,
டி.சி.டபிள்யு.,
புஸ்கோ க்ரிக்கெட் க்ளப்,
எஸ்.டி.ஆர். க்ரிக்கெட் க்ளப்,
யூத் க்ரிக்கெட் க்ளப்,
ஐக்கிய விளையாட்டு சங்கம் (யு.எஸ்.ஸி.),
டி.ஆர்.சி. - பி.,
காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) - ஏ.,
காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) - பி.,
பவர் க்ரிக்கெட் க்ளப்,
அஸ்கர் க்ரிக்கெட் க்ளப்,
கவாஸ்கர் க்ரிக்கெட் க்ளப்,
போப்ஸ் க்ரிக்கெட் க்ளப்
ஆகிய 16 அணிகள் இச்சுற்றுப்போட்டியில் பங்கேற்கின்றன.
முதல் நாள் போட்டி:
டிசம்பர் 27 அன்று (நேற்று) நடப்பாண்டின் போட்டிகள் துவங்கின. காயல்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா முதல் போட்டியைத் துவக்கி வைத்தார். அவருக்கு, காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது. பின்னர், அவருக்கு வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
பின்னர், போட்டி துவங்கியது. துவக்கப்போட்டியில், ரமேஷ் ஃப்ளவர்ஸ் க்ரிக்கெட் க்ளப் அணியும், செகண்ட்ஸ் க்ரிக்கெட் க்ளப் - பி. ஆகிய அணிகள் மோதின.
டாஸில் வென்ற செகண்ட்ஸ் பி அணி துடுப்பாட்டத்தைத் தேர்ந்தெடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் அவ்வணி, 8 வீரர்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணியின் பிரபு, சுரேஷ் ஆகிய வீரர்கள் முறையே 29, 25 ஓட்டங்களைப் பெற்றனர். எதிரணியின் சிவா 20 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார்.
அடுத்து களமிறங்கிய ரமேஷ் ஃப்ளவர்ஸ் அணி, 13 ஓவர்களின் நிறைவில், வெற்றி இலக்கான 135 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் ஜேம்ஸ் 68 ஓட்டங்களைப் பெற்று, ஆட்டமிழக்காமல் இருந்தார். சுப்பிரமணியன் 27 ஓட்டங்களைப் பெற்றார். எதிரணி வீரர் ராஜ் சங்கர் 17 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 வீரரை ஆட்டமிழக்கச் செய்தார்.
இப்போட்டியில் ரமேஷ் ஃப்ளவர்ஸ் அணி வெற்றிபெற்று, காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அந்த அணியின் ஜேம்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டாம் நாள் போட்டி:
டிசம்பர் 28 அன்று (இன்று) நடைபெற்ற இரண்டாம் நாள் போட்டியில், டி.சி.டபிள்யு, மற்றும் புஸ்கோ க்ரிக்கெட் க்ளப் ஆகிய அணிகள் மோதின.
டாஸில் வென்ற டி.சி.டபிள்யு. அணி துடுப்பாட்டத்தைத் தேர்ந்தெடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் அவ்வணி, 7 வீரர்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணியின் ராம் மகேஷ், செல்லதுரை ஆகிய வீரர்கள் முறையே 49, 26 ஓட்டங்களைப் பெற்றனர். எதிரணியின் ஹாட்லின் 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 வீரர்களையும், மாரி செல்வம் 46 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 வீரர்களையும் ஆட்டமிழக்கச் செய்தனர்.
அடுத்து களமிறங்கிய புஸ்கோ அணி, 20 ஓவர்களின் நிறைவில், 8 வீரர்களை இழந்து 100 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. அந்த அணியின் ஹரீஷ், ஜோஃபைர் ஆகிய வீரர்கள் முறையே 35, 15 ஓட்டங்களைப் பெற்றனர். எதிரணி வீரர் லியோ 17 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 வீரர்களையும், ஹெட்வின்ட் 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 வீரர்களையும், ராம் மகேஷ் 13 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 வீரர்களையும் ஆட்டமிழக்கச் செய்தனர்.
இப்போட்டியில் டி.சி.டபிள்யு. அணி 53 ஓட்டங்கள் வேறுபாட்டில் வெற்றிபெற்றது. அந்த அணியின் ராம் மகேஷ் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தகவல்:
சுலைமான்
(தொடர்பு எண்: +91 98946 03462)
|