துளிரி சிறப்பு குழந்தைகள் பள்ளியில் மின்சாரம், தண்ணீர் பயன்பாட்டை சிக்கனமாக மேற்கொள்ள கருத்தரங்கம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இது குறித்து அப்பள்ளி சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:
துளிரி சிறப்பு குழந்தைகள் பள்ளியின் காணொலி கூடத்தில் துளிரின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு வீடுகளில், பள்ளியில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது பற்றியும், தண்ணீரை வீண் விரையம் செய்யக்கூடாது என்பது
பற்றியும் விளக்கி விழிப்புணர்ச்சி; நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோர் மன்ற உறுப்பினர் சலீம் தலைமையேற்றார். ஜெயந்தி முன்னிலை வகித்தார். துளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்திரம்ஜான் அனைவரையும்
வரவேற்றார். துளிர் நிறுவனர் வழக்கறிஞர் அஹமத் மின்சாரம் தண்ணீர் சிக்கனத்திற்கான பல்வேறு வழிமுறைகளை காணொலி மூலம் விளக்கி காண்பித்தார்.
இந்த கருத்துக்கு தொடர்புடைய குறும்படங்களும் காண்பிக்கப்பட்டது. வழக்கறிஞர் அஹமத் தனது விளக்க உரையில் கீழ்கானும் விஷயங்களை எடுத்துரைத்தார். இன்று நாம் பயன்படுத்துகிற பெருமளவு நீர் குடிநீர்தான, அதை நாம் வீணாக்கி
கொண்டிருக்கிறோம். நமக்கு கிடைக்கும் அளவு குடிநீரும், நிலத்தடி நீரும்; கூட இல்லாமல், எத்தனை நாடுகள் தவிக்கின்றன. ஏன் நமது நாட்டிலேயே எத்தனை மாநிலங்கள் தவிக்கின்றன ஆனால் நாம் அவற்றை வீணில் கழிவுகளுடண் கலக்க
விடுகிறோம். எங்கெல்லாம் நாம் நீரை வீணாக்குகிறோம் என்பதற்குப் பெரிய பட்டியலே இருக்கிறது.
ஓவ்வொரு நாளும் காலை எழுந்தது முதல் எந்தெந்த வகையில் நாம் நீரைப் பயன்படுத்துகிறோம்? அதில் எவ்வளவு பயனுள்ள அளவு? ஏவ்வளவு வீண் செய்கிறோம்? என்று ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டாலே புரிந்து விடும். ஈரோட்டில் பெரியாரின்
உறவினர் வீட்டில் விருந்து ஒன்று ஏற்பாடாகியிருந்தது. உணவு முடிந்தது. அந்தக் காலத்தில் தண்ணீர்க் குழாய் எல்லாம் கிடையாது அல்லவா? அதனால் உணவை முடித்து கை கழுவ வந்த தந்தை பெரியாருக்கு ஒரு சொம்பில் வைத்து நீர் ஊற்றி
கொண்டிருந்தார் உறவினர் சிறுவர் ஒருவர் கை கழுவத் தேவையான அளவை விட அதிகமாக நீர் ஊற்றி கொண்டே இருந்திருக்கிறார் அந்த சிறுவர் உடனே அதைக் கண்டித்த பெரியார் தண்ணீர் சும்மா கிடைக்கிறதுங்கிறதுக்காகத்தானே நீ உன்பாட்டுக்கு
ஊத்திக்கிட்டே இருக்கிற. இதே எண்ணெயாக இருந்திருந்தா இப்படி ஊத்துவியா? ஏன்று கேட்டிருக்கிறார்.
வெகு எளிதான இந்தக் கேள்வியில் எவ்வளவு பொருள் அடங்கியிருக்கிறது பார்த்தீர்களா? அதிகச் சிரமமின்றி கிடைக்கிறது என்பதற்காகவும் காசில்லாமல் கிடைக்கிறது என்பதற்காகவும் தண்ணீரை வீணாகச் செலவழிக்கிறோம் முதலில் பல்
துலக்குவதை பற்றி பார்ப்போம் காலை எழுந்து சோம்பல் முறித்தப்படி சென்று கையில் பற்பசையையும் (Tooth paste), பல் துலக்கும் குச்சியையும் (Tooth brush) எடுப்பதற்கு முன்பாகவே குழாயிலிருந்து தண்ணீரை திறந்து விடுவோம். பிறகு
பொறுமையாக 2-3 நிமிடங்கள் பல் தேய்ப்போம். பின்னர் பற்குச்சியைக் கழுவி வைத்து விட்டு இரண்டு கையிலும் நீரைப் பிடித்து முகம் கழுவி துணியை எடுத்து துடைத்த பின்தான்; குழாயை மூடி விட்டுக் கிளம்புவோம் கிட்டத்தட்ட 5 நிமிடம்
குழாயிலிருந்து நீர் கொட்டிக்கொண்டேயிருக்கும். அந்த 5 நிமிடத்தில் எவ்வளவு தண்ணீர் வீணாகியிருக்கும்?
குளிக்கிறோம் என்ற பெயரில்….கழிக்கிறோம் என்ற பெயரில்…. சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் எவ்வளவு நீரை வீணாக்குகிறோம். பாத்திரம் கழுவுகிறோம்;;; வீடு கழுவுகிறோம்;;; மகிழுந்து வாகனம் கழுவுகிறோம்;;; என்று குழாயில் நீரைப்
பயன்படுத்துகிறோம் அதிலும் வாகனம் கழுவுவதற்கு குழாயில் நீரைப் பீய்ச்சியடித்து அதனால் எவ்வளவு நீர் வீண் தெரியுமா?
நம்முடைய சூழலை நம்முடைய எதிர் காலத்துக்காகக் காக்க வேண்டுமானால் இதைப்பற்றியெல்லாம் யோசித்து நாம் செயல்பட்டே ஆக வேண்டும்.
இன்று நாம் அதிக அளவில் வீட்டுப் பயன்பாடுகளுக்கு மின் ஆற்றலைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.
அரைப்பான் (Mixer grinder), அரவை இயந்திரம் (Grinder), சலவை இயந்திரம (Washing machine), தேய்ப்பான் (Ironing Box), தண்ணீர் சூடேற்றும் கலன் (Water Heater), அறைக்கு அறை குளிரூட்டி (Air Conditioner), குளிர்சாதனப்
பெட்டி (Refrigerator), கணிப்பொறி (Computer), மின்விசிறி (Fan), மின்விளக்கு (Bulb), தொலைக்காட்சி (Television), அது தொடர்பான இதர கருவிகள்…. இப்படி பட்டியல் போட்டால் நீண்டுகொண்டே இருக்கிறது. நம் வாழ்வின் எந்த ஒரு
நொடியையும் மின்சாரம் இல்லாமல் செலவழிக்க முடியாது என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம்.
ஆளில்லாத அறையில் ஓடும் மின்-விசிறி, மின்-விளக்கு, நிரம்பிய-பின்னும் அணைக்-கப்படாத நீரேற்றும் இயந்திரம் (Motor), யாருமே பார்க்-காமல் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி பெட்டி, நீண்ட நேரம் வேலையில்லாமல்
இயக்கவைக்கப்பட்டிருக்கும் கணினி, சூடான பின்னும் அணைக்கப்படாத சூடேற்றும் கருவி ஒரே நேரத்தில் ஆளுக்கொரு அறையில் அமர்ந்து கொண்டு வேலை செய்வதால் இயக்கப்படும் கருவிகள், கதவை மூடிவிட்டு அணைக்க மறந்த கழிவறை
மின்விளக்கு, இவையெல்லாவற்றையும் கூடுமான அளவு கட்டுப்படுத்தினால் நம்மால் எவ்வளவோ மின்சாரத்தை சேமிக்க முடியும்.
மின்சார சிக்கனம் பற்றாக்குறை காரணமாக அல்லஇ மின் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகளிலும் மின்சார சிக்கனம் வலியுறுத்தப்படுகிறது… வேறு எதற்கு? சூழலைக் காக்கவும்… நம் உடம்பைக் காக்கவும்.; இதுபோன்ற பல்வேறு மின்இ நீர்இ
சிக்கன கருத்தை வழக்கறிஞர் அஹமத் வலியுறுத்தினார். இறுதியில் இந்த நிகழ்சியில் கலந்து கொண்ட பெற்றோர் மன்ற உறுப்பினர் ஜெயந்தி நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|