காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் இயங்கி வரும் - காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளைக்கு அதன் நிர்வாகக் குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதோடு, அண்மையில் காலமான - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
நமது காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு கூட்டம், தலைவர் அல்ஹாஜ் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்கள் தலைமையில், எமது செயலகத்திலுள்ள கான்ஃபிரன்ஸ் ஹாலில், 26.12.2013 வியாழன் காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.
அல்ஹாஜ் பாளையம் எம்.ஏ.முஹம்மது ஹஸன் அவர்கள் கிராஅத் ஓதி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். பின்னர், அறங்காவலர்களின் கலந்துரையாடலுக்குப் பின்பு, கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - ஐக்கியப் பேரவை தலைவர் மறைவுக்கு இரங்கல்:
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் தலைவரும், ஊர் நலனில் அக்கறை கொண்டவரும், சமூக நல்லிணக்க ஆர்வலரும், மனித நேயமிக்கவரும், நமது அறக்கட்டளையின் செயல்பாட்டின் மீது அதிக அக்கறை செலுத்தியவரும், காலத்திற்கேற்ப பல யோசனைகள் வழங்கி, நம் அறக்கட்டளையின் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றியவருமான அல்ஹாஜ் ஒத்தமுத்து எம்.எம்.உவைஸ் அவர்கள் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்களைப் பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், அன்னாரின் மஃபிரத்திற்காக இக்கூட்டத்தில் துஆ செய்யப்பட்டது.
தீர்மானம் 2 – புதிய நிர்வாகிகள் தேர்வு:
நமது காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளையின் ஜனவரி 01, 2014 முதல் டிசம்பர் 31, 2016 வரையுள்ள 3 ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் பின்வருமாறு ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்:-
தலைவர்:
அல்ஹாஜ் பாளையம் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் அவர்கள்
துணைத்தலைவர்கள்:
(1) அல்ஹாஜ் கத்தீபு எஸ்.ஏ.செய்யித் அஹ்மத் அவர்கள்
(2) அல்ஹாஜ் டூட்டி எம்.எஸ்.எல்.சுஹரவர்தி அவர்கள்
(3) அல்ஹாஜ் கே.எம்.ஸலீம் அவர்கள்
செயலாளர்:
அல்ஹாஜ் வட்டம் எஸ்.எம்.ஹஸன் மரைக்கார் அவர்கள்
துணைச் செயலாளர்கள்:
(1) அல்ஹாஜ் ஏ.கே.கலீலுர்ரஹ்மான் அவர்கள்
(2) அல்ஹாஜ் எஸ்.ஏ.ஜவாஹிர் அவர்கள்
(3) அல்ஹாஜ் கத்தீபு ஏ.ஜெ.முஹம்மத் மீரா ஸாஹிப் அவர்கள்
பொருளாளர்:
அல்ஹாஜ் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அவர்கள்
துணைப் பொருளாளர்:
அல்ஹாஜ் பி.எம்.டி.ஹபீப் முஹம்மத் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர்:
அல்ஹாஜ் எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் அவர்கள்
தீர்மானம் 3 – காலியிடங்களுக்கு புதியோர் தெரிவு:
காலியாக உள்ள அறங்காவலர்களின் இடங்களில் புதியவர்களை விரைவில் தெரிவு செய்ய இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, அல்ஹாஜ் பாளையம் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் அவர்களின் இனிய துஆ ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது.
இவ்வாறு காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செய்தி திருத்தப்பட்டது @ 22:13 / 01.01.2014] |