காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
தற்போது கடல் நிறமாற்றமின்றி தெளிவாகக் காணப்பட்டாலும், கடலில் கழிவு நீர் கலக்குமிடத்திலிருந்து கடலுக்குள் தண்ணீர் அவ்வப்போது கலக்கிறது.
27.12.2013 அன்று 18.15 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் டிசம்பர் 26ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[28 December 2013] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32206
தம்பி, S.K.ஸாலிஹ், ஒரு மாறுதலுக்காக உங்களின் காமெராவை கடல் பக்கம் காட்டாமல், நம் கடற்கரையின் பக்கம் திருப்புங்களேன்.
* கடற்கரை பூராவும் ஒரே குப்பைகள். எந்த இடத்தில் அமருவது, எந்த குப்பைக்கு நடுவில் அமர்ந்ததால் பாதிப்பு இல்லை என்று முடிவு எடுக்கவே பல நிமிடங்கள் ஆகிவிடுகின்றன.
* வாடா,வடை, கஞ்சி வியாபாரிகள் கடல் மணல் பரப்பில் வியாபாரம் செய்யக்கூடாது என்ற விதி உள்ளது. தற்போது அதை அவர்கள் பின்பற்றுவதும் கிடையாது, கேட்பாரும் கிடையாது. வடை சுட காஸ் அடுப்பையும், கஞ்சி சூடு பண்ண கரி அடுப்பையும் பயன் படுத்துகிறார்கள். கடற்க்கரை என்ட்ரன்ஸ் பூராவும் அடுப்பு கரிதான்.
* பெண்கள் அமரும் பகுதியை, நம் பசங்க நிரந்தர கால்பந்து விளையாட்டு பகுதியாகவே மாற்றி விட்டார்கள். பெண்களும் குழந்தைகளும் அங்கு அமரவே பயப்படுகிறார்கள். ஆனால், கடற்கரையில் கால்பந்து விளையாட்டு விளையக்கூடாது என்ற காவல் துறை அறிவிப்பு பலகை மட்டும் பல்லை இழிக்கிண்றது.
* மாடுகளின் பொழுது போக்கு இடமும், காலை, மாலை, நடுக் கடன்களை கழிக்கும் இடமாகவும் நம் கடற்க்கரை திகழுகின்றன.
* இரவு நேரங்களில், கரண்டு கட்டின் உபயோகத்தால் ஒரு சில ஜோடிகள்.... புரிந்து இருக்கும்.
ஆக, இதற்க்கு ஒரு வழி பிறக்குமா..!! நிம்மதியாக நம் கடற்கரையை, நம் வளத்தை அனுபவிக்க முடியுமா..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross