வட்டியில்லா நிதித் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதை அடிப்படை செயல்திட்டமாகக் கொண்டு, இந்தியாவின் 12 மாநிலங்களில் 18 கிளைகளுடன் செயல்பட்டு வரும் அமைப்பு ‘ஜன்சேவா கூட்டுறவு சங்கம்’ ஆகும். வட்டியில்லா வங்கி அமைப்பதை நோக்கி அது தன் பயணத்தைத் தொடர்கிறது.
இதுகுறித்த அறிமுகம் மற்றும் கலந்தாலோசனைக் கூட்டம், இன்று (டிசம்பர் 29) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்த அழைப்பிதழ்:-
1. வட்டியில்லா கடனை பெற்று கொண்டு வேறு ஒருவருக்கு வட்டிக்கு கொடுக்கவும் யோசிப்பார்கள்... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[29 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32210
2010 ஆம் ஆண்டு 9 நபர்களால் 25 லட்சம் ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வட்டியில்லா வங்கி மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 75 லட்சம் வரை வட்டியில்லா முதலீடு - கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக இருக்கும் இச்செய்தியில் ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தில் (முதலீடு மற்றும் கடன்கள்) அணைத்து சமுதாய மக்களுக்கும் பொருந்தமா..? அல்லது ஒரு சமுதயாத்திற்கு மட்டும் தான் பொருந்தமா...? என்ற குழப்பம் என்னுள் எழுகிறது..!
இன்று நமது நகரில் பெயரளவில் மட்டும் முஸ்லீமாக இருந்து கொண்டு அவருக்கு நெருங்கிய மாற்று சமுதாய நபர்களின் மூலம் வட்டிக்கு கொடுக்க செய்து கேவலமான பிழைப்பு நடத்தி வருவது பெருகிவிட்டது...
ஆகையால் இவ்வங்கி இந்நகரில் தொடங்கப்பட்டால் முஸ்லீம் போர்வையில் ஒளிந்து கொண்டு இவ்வங்கியில் வட்டியில்லா கடனை பெற்று கொண்டு வேறு ஒருவருக்கு பிறருக்கு வட்டிக்கு கொடுக்கவும் யோசிப்பார்கள்... மிக கவனமாக ஆட்களின் தராதரம் அறிந்து அவரின் தக்குவா ஈமான் ஒழுக்கம் சிபாரிசு மூலம் அறிந்து செயல்பட்டால் மட்டுமே இவ்வங்கி நிலைத்து நிற்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross