ஜூன் 14 அன்று வீரபாண்டியன்பட்டினம் அருகே லாரியுடன் மோட்டார் பைக் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இருவருக்கு பலத்த காயம்
ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் ஒருவர் தஃவா சென்டரின் கஸ்வா வேன் ஓட்டுனராக பணிபுரிந்து கொண்டிருந்த அப்துர் ரஹ்மான் என்பவர். இவர் தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். அது குறித்து தஃவா சென்டர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள
அறிக்கை வருமாறு:
அன்புள்ள சகோதர/சகோதரிகளுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…….
இந்த மடல் தூய இஸ்லாமிய உணர்வுடனும் பூரண உடல் ஆரோக்கியத்துடனும் சந்திக்கட்டுமாக!
நமது தஃவா சென்டரின் பணிகள் நல்ல முறையில் நடந்து வருகின்றது. (அல்ஹம்துலில்லாஹ்).
…… ” எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் ”…… அல்குர்ஆன்[5:32]
மேற்க்கண்ட வசனத்திற்க்கு ஏற்ப, அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி, நமது தஃவா சென்டரின் கஸ்வா வேன் ஓட்டுனராக பணிபுரிந்து கொண்டிருந்த சகோதரர் அப்துர் ரஹ்மான் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி ஏற்பட்ட பைக் விபத்தில் அவருக்கு
குடல் நைந்து, இடுப்பு எழும்பு மற்றும் முதுகு எழும்பு உடைந்து, உடல் உபதையால் அவதி பட்டுக்கொண்டுருந்த அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்திட அதிக அளவு பெருளாதரம் செலவு தேவையை முன்னிட்டு இணையதளம், Email மற்றும்
facebook வாயிலாக செய்திகளின் மூலம் நிதி திரட்டப்பட்டு அவருக்கு மூன்று வெவ்வேறு ஆபரேசன்களும் தேவையான மருத்துவ உதவிகளும் செய்யப்பட்டன.
தற்போது அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தேரியுள்ளார். மேலும் அவர் வேலைக்கு செல்லயும் தயாராகி விட்டார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!
இந்த சகோதரர்க்கு உதவி செய்திட, தானும் உதவி செய்து பிறரையும் உதவி செய்ய தூண்டிய சகோதர/ சகோதரிகளுக்கும், மேலும் இச்செய்தியை மக்களுக்கு கொண்டு சென்றிட உதவியாக இருந்த நமதூர் இணையதளங்கள் மற்றும் facebook
வழியாக கொண்டுச் சென்ற நண்பர்களுக்கும் தஃவா சென்டர் சார்பாகவும் அவர்களின் குடும்பத்தின் சார்பாக ஜஸாக்குமுல்லாஹ் ஹைரன் தெரிவித்து கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் செய்திடு நல்ல அமல்களை இன்னும் அதிகமாக செய்யக் கூடியவர்களாக மாற்றி நம் யாவருடைய பாவங்களையும் மன்னித்து ஈருலகிலும் வெற்றியை தந்தருள்வானாக!
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|