சவுதிஅரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 78 வது செயற்குழு கூட்டம் கடந்த 18.04.2014 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 07:00 மணியளவில்,
ஜித்தா – ஷரபிய்யாவில் அமைந்துள்ள இம்பாலா கார்டன் உணவகத்தில் வைத்து நடந்தேறிய அந்நிகழ்வுதனை பற்றி அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: -
எல்லாம் வல்ல ஏக நாயனின் அருட்பெரும் கிருபையினால் சவுதிஅரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 78 வது செயற்குழு கூட்டம் கடந்த 18.04.2014 வெள்ளிக்கிழமை இரவு மக்ரிப் தொழுகைக்குப் பிறகு 07:00 மணியளவில், ஜித்தா – ஷரபிய்யாவில் அமைந்துள்ள இம்பாலா கார்டன் உணவகத்தில் வைத்து நடந்தேறிய செயற்குழு கூட்டதிற்கு சகோ. எஸ். ஹெச். ஹுமாயூன் கபீர் தலைமை பொறுப்பினை ஏற்று நடத்த, சகோ.எம்.ஏ.எம்.ஈஸா ஜக்கரியா இறைமறை ஓத கூட்டம் ஆரம்பமானது, தொடர்ந்து வரவேற்புறையை சகோ . செய்யது அஹ்மது நிகழ்த்தினார்.
மன்றத்தின் செயல்பாடுகள்:
கடந்த செயற்குழுவில் நடந்த நிகழ்வுகளையும் , வழங்கிய மருத்துவ உதவிகளையும் , நிறைவேற்றிய தீர்மானங்களையும் கோடிட்டு காட்டி, இம்மன்றத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறியதுடன் உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பான ஷிபாவின் செயல்பாடுகள், எந்த நிலையில் இருந்து வருகிறது என்பதனயும், மன்ற செயலாளர் சகோ. எம்.ஏ. செய்து இப்றாஹிம் மற்றும் மன்றத்தின் தலைவர் சகோ. குளம் அகமது முஹியதீனுடன் இணைந்து, இருவரும் நல்ல பல கருத்துக்களை அழகாக பதிவு செய்தார்கள்.
நிதி நிலை:
கல்வி மற்றும் மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கம், அன்றைய சந்தாக்களின் வரவு அன்றைய தினம் உறுப்பினர்கள் வழங்கிய நன்கொடை தொகை போக மீதி நிதியின் இருப்பு மற்றும் விடுப்பு விபரங்களை துல்லியமாக பட்டியலிட்டார் பொருளர் சகோ. எம். எஸ். எல். முஹம்மது ஆதம்.
மருத்துவ உதவி:
மருத்துவ உதவி வேண்டி ஷிபா மூலமாக வந்த விண்ணப்பங்கள் உறுப்பினர்களால் வாசிக்கப்பட்டு முறையே, முகத்தில் சில குறைபாடு உள்ள சிறுவனுக்கு அறுவை சிகிச்சை, கால் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மற்றும் கால் நரம்பு பாதிப்பால் அவதிபடும் நபருக்கு சிகிச்சை என மூன்று பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க முடிவு செய்யப்பட்டு, பூரண உடல் நலத்திற்கும் பிராத்திக்கப்பட்டது.
மன்ற செயல்பாடுகள் மற்றும் சென்ற செயற்குழுவில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் நமதூர் மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக சிறப்பு முகாம் நடத்துவது பற்றிய விவாதத்தையும் எடுத்து வைத்து, KEPA நடவடிக்கை பற்றியும் கலந்துரையாடல் செய்த பின் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
1 – சுகாதார விழிப்புணர்வு முகாம் பள்ளி மாணவர்கள் மூலம் நடத்துவதென்றும், அதில் பேச்சு போட்டி, கட்டுரை மற்றும் ஓவிய போட்டி நடத்தி, சிறப்பு மருத்துவர் மூலம் நம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதற்கென ஐவர் குழு அமைக்கப்பட்டது.
2 - நமதூர் நலன் கருதி KEPA எடுக்கும் எந்த நல்ல முடிவிற்கும் இம்மன்றம் முழு ஆதரவு அளிக்கும்.
3 - அடுத்த 79 வது செயற்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் மே மாதம் நடைபெறும் இடம் / நாள் பின்னர் அறியத்தரப்படும்.
நன்றி நவிலல்:
சகோ. குளம் அகமது முஹியத்தின் நன்றி நவில, சகோ. எம். எஸ். எல். முஹம்மது ஆதம் துஆ கஃப்பாராவுடன் செயற்குழு வாதம், விவாதம், மற்றும் கருத்துப் பரிமாற்றங்களுக்கு பின் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
சிறப்பு விருந்தினர்:
குடும்பத்துடன் உம்ரா கடமையை நிறைவேற்ற வந்திருந்த, சகோ. எம். எஸ். எல். முஹம்மது ஆதம் மச்சான், சகோ.பி.எஸ்.ஐ. முஹம்மது தீபி இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொண்டார்கள்.
சகோ . முத்துவாப்பா சாதிக் அனுசரணையுடன் இரவு உணவு பரிமாறப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை மன்ற சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
தகவல்:
எஸ்.ஹெச்.அப்துல்காதர்,
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
18.04.2014.
|