இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடப்பு ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 வியாழக்கிழமையன்று (நாளை) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
தேர்தல் பரப்புரைகள் இம்மாதம் 22 அன்று 18.00 மணியுடன் நிறைவடைந்தது.
ஏப்ரல் 24 வியாழக்கிழமை (இன்று) தேர்தல் நாளாகும். வாக்குப்பதிவு இன்று 07.00 மணிக்குத் துவங்கி, 18.00 மணிக்கு முடிவுற்றது.
இன்று மாலையில், வாக்குப்பதிவு நேரம் நிறைவடைவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா வாக்களித்த மற்றும் முதியவர் ஒருவர் உறவினர்கள் துணையுடன் வாக்களிக்கச் சென்ற காட்சிகள்:-
அதன் பின், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட காலங்களில், காயல்பட்டினம் புறநகரில் அதிமுக கூட்டணிக்கும், அகநகரில் திமுக கூட்டணிக்கும் பெருவாரியான வாக்குகள் பதிவாகும் நிலை இருந்தது.
நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஒன்றையொன்று சாராமல் தனித்தனியாக களமிறங்கியுள்ளதால், காயல்பட்டினத்தில் வாக்குகள் கனிசமாக சிதறியுள்ளதாகத் தெரிகிறது.
திமுகவுக்கு ஆதரவாக வழமையாகப் பதிவாகும் அகநகர் வாக்குகளில் கனிசமானவை, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கும், புறநகர் வாக்குகளில் கனிசமானவை மதிமுக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கும் பிரிந்திருப்பதாக, வாக்களித்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் மூலம் அறிய முடிந்தது.
காயல்பட்டினத்தில், வாக்குச் சாவடி (பூத்) வாரியாக பதிவான மொத்த வாக்குகள் விபரம் விரைவில் செய்தியாக வெளியிடப்படும்.
நடப்பு நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |