தமிழகத்தில் இருந்து, இவ்வாண்டு - இந்திய ஹஜ் குழு மூலம், ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள பயணியர் தேர்வு ஏப்ரல் 21 அன்று சென்னையில் புதுக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் - ஹஜ் குழுவின் செயலர் மற்றும் செயல் அலுவலர் முஹம்மது நசீமுத்தீன் IAS, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அரசு முதன்மைச் செயலர் முனைவர் க.அருள்மொழி IAS மற்றும் ஹஜ் குழுவினர் கலந்துக்கொண்டனர்.
தேர்வானோர் விபரம் www.hajcommittee.com என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யபப்ட்டுள்ளது.
இவ்வாண்டு - இந்திய ஹஜ் குழு மூலம், நாடு முழுவதில் இருந்தும் சுமார் 94,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள - 13,166 விண்ணப்பங்கள் இவ்வாண்டு பெறப்பட்டன. துவக்கமாக தமிழகத்திற்கு 2361 இடம் ஒதுக்கப்பட்டது. பின்னர் கூடுதலாக 311 இடங்கள் வழங்கப்பட்டன. ஆக மொத்தம் - தமிழகத்தில் இருந்து - இந்திய ஹஜ் குழு மூலம் - 2672 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
தகவல்:
இந்திய ஹஜ் குழு
|