இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தூத்துக்குடி மாவட்டம் - காயல்பட்டினத்தில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து செந்தூர் விரைவுத் தொடர்வண்டி மூலம், இன்று காலை 08.00 மணியளவில் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் வந்தடைந்தார்.
கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், பாங்காக் காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர மூத்த நிர்வாகி வாவு சித்தீக் ஆகியோர் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, காயல்பட்டினம் நகர கிளை பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர நிர்வாகிகளான என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், எம்.எச்.அப்துல் வாஹித், பெத்தப்பா சுல்தான், எம்.இசட்.சித்தீக் உட்பட பலர் இதன்போது உடனிருந்தனர்.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்)
கள உதவி:
A.R.ஷேக் முஹம்மத்
(மாணவரணி காயல்பட்டினம் நகர அமைப்பாளர்)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் |