மைக்ரோகாயல் அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில், ஷிஃபா அமைப்புக்கு 2014-15 ஆண்டிற்கான வருடாந்திர நிதியொதுக்கீடு செய்தும், 200 பேருக்கு மருத்துவ உதவி அட்டை - காயல் மெடிக்கல் கார்ட் (KMC) வினியோகிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அல்ஹம்துலில்லாஹ், கடந்த இரண்டு வருடங்களாக காயல் நகர மக்களின் மருத்துவம் சார்ந்த துயர் துடைக்க காயல் நகர மக்களால் இணையம் மூலம் “சிறு துளி பெரு வெள்ளம்” என்ற காரணியின் அடிப்படையில் வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் மைக்ரோகாயலின் 4ம் செயற்குழு கூட்டம் 26/04/2014 அன்று மைக்ரோகாயலின் செயற்குழு உறுப்பினரும் , அதன் ஹாங்க்காங்க் பிரதிநிதியுமான சகோ.முஹம்மது நூஹு அவர்களின் எல்.எப் ரோடு இல்லத்தில் இனிதே நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மைக்ரோகாயலின் தலைவர் சகோ.T.A.S. அபூபக்கர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். செயற்குழு உறுப்பினர் சகோ. செய்யது இஸ்மாயில் அவர்கள் கிராஅத் ஒதி துவக்கி வைத்தார்கள்.
காயல் மெடிக்கல் கார்டு – கண்கூடாக தெரியும் ஒர் அருமையான திட்டம்
வரவேற்புரை ஆற்றிய மைக்ரோகாயலின் தலைவர் சகோ.T.A.S. அபூபக்கர் அவர்கள் காயல் மெடிக்கல் கார்டு திட்டத்தை வெகுவாக பாரட்டினார்கள். மற்ற மருத்துவ உதவிகள் போல் அல்லாமல் இதன் பயனை கண்கூடாக தினமும் கே.எம்.டி மருத்துவமனையில் தாம் பார்த்து உணர்வதாகவும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடத்த உதவும் அனைவரையும் தாம் பாரட்டுவதாகவும் கூறினார்கள். இதுவரை சுமார் 200 பயனாளிகள் இந்த கார்டு பெற்றுள்ளனர் என்றும் கூறினார்கள்.
ஷிபாவில் மைக்ரோகாயலின் பங்கு:
பின்னர் 2013-14 க்கிற்கான நிதிநிலை அறிக்கை மைக்ரோகாயலின் ஸ்தாபகரும் அதன் செயற்குழு உறுப்பினருமான சகோ.செய்யது ஹஸன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டு அதன் விளக்கங்கள் சரி பார்க்கபெற்று ஒப்புதல் அளிக்கபட்டது.
மேலும் இதுவரை மைக்ரோகாயல் ஷிபா மூலம் அளித்த உதவி விபரங்களும் விரிவாக விளக்கப்பட்டன. கடந்த 7 மாதங்களில் ஷிபா மூலம் சுமார் 6 லட்சம் வரை உதவி செய்யப்பட்டுள்ளது என்றும் இது ஷிபா மூலம் செய்யப்பட்ட மொத்த உதவியில் சுமார் 35% ஆகும் என்றும் அதற்க்காக வேண்டி உதவி செய்த அனைத்து மைக்ரோகாயல் உறுப்பினர்களையும் மேலும் அயராது உழைத்து கொண்டு இருக்கும் அதன் அனைத்துலக பிரதிநிதிகளையும் நன்றியுடன் (ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா) பாராட்டுவதாக அவர் கூறினார்.
ஷிபாவிற்கான 2014-15 ஆண்டிற்க்கான நிர்வாக செலவிற்கு நிதி ஒதுக்கீடு:
மேலும் 2014-15ம் ஆண்டிற்க்கான ஷிபாவின் நிர்வாக செலவிற்கு ரூபாய் 10,000 நிதி ஒதுக்கப்பட்டு அதை உடனைடியாக வழங்கவும் தீர்மானிக்கபட்டது.
ஷிபா அமைப்பானது நல்ல முறையில் நடைபெறுவதாகவும் மேலும் கால நிர்ணயம் வைத்து பயனாளிகளுக்கு உதவிகள் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் உடனடியாக அரசாங்கம் மூலம் கிடைக்கும் அனைத்து உதவிகளையும் பெற ஷிபா நம் காயல் நகர மக்களுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் அதற்க்கு மைக்ரோகாயல் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கப்பாரா துஆ உடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
J.செய்யித் ஹஸன்
மைக்ரோகாயல் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |