படிப்பை முடித்துவிட்டு, வேலைவாய்ப்பு தேடும் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி வழிகாட்ட, பெங்களூரு காயல் நல மன்றத்தின் சார்பில் சிறப்பு செயல்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எல்லாம் வல்ல இறையருளால் எமது பெங்களூர் காயல் நல மன்றத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் செயற்குழு கூட்டம் இம்மாதம் 27ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அஸ்ர் தொழுகைக்குப் பின், பெங்களூரில் உள்ள காயலர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிலுவையிலுள்ள - கடந்த ஆண்டிற்கான சந்தா தொகைகளை உறுப்பினர்கள் விரைந்து செலுத்தி, மன்றத்தின் நகர்நலப் பணிகள் தொய்வின்றித் தொடர ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, படிப்பை முடித்துவிட்டு, வேலைவாய்ப்பு தேடும் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி வழிகாட்ட, பெங்களூரு காயல் நல மன்றத்தின் சார்பில் சிறப்பு செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டு, பின்வருமாறு அறிவிப்பு மன்றத் தலைவரால் வெளியிடப்பட்டது:-
Mentor & Mentee Program (MMP):
கல்லூரிப் படிப்பை முடித்த வேலை தேடும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, தான் வேலைவாய்ப்பு தேடும் தொழில்துறை (industry), வேலை தேடலில் உள்ள சிக்கல்கள், கார்ப்பரேட் உலகத்தின் எதிர்பார்ப்புகள், தன் துறை சார்ந்த உயர் நிலை (மேலைநாட்டு) படிப்புகள் வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து போதிய அறிவையும், விழிப்புணர்வையும் ஊட்டிட வேண்டும்.
இவ்வழிகாட்டலைப் பெற்றிட ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் இரண்டாம் ஆண்டு முதல் அதே துறையில் போதிய அறிவும் அனுபவமிக்க - பணியிலிருக்கும் ஒருவரை ஆலோசகராக வழிகாட்டியாக ஏற்படுத்தி, அம்மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறும்போது போதிய ஆற்றல் மிக்கவர்களாக இத்திட்டத்தின் மூலம் உருவாகலாம்.
இவ்வாறு மன்றத் தலைவர் விளக்கிப் பேசினார்.
மன்ற துணைத்தலைவர் ஜபரூத் மவ்லானா Mentor and Mentee Programme பற்றிய செயல்முறை விளக்கத்தை கணினி மூலம் அளித்தார்.
விருப்பமுள்ள Mentee மாணவர்கள்
Mentee Name
Course
Collage
Year
Contact number
Email
Skype ID
Future interest
Reference
என்ற விபரப்படி தம்மைப் பற்றிய சுயவிபரத்தை,
ஜாபர் சுலைமான்
(88 61 51 19 87 / sulaiman.jaffer@yahoo.com)
முஹம்மது இப்ராஹீம் நவ்ஷாத்
(89 51 73 73 53 / ibnunowshad@live.com)
ஆகியோருள் ஒருவரை தொலைபேசி அழைப்பு மூலமோ, Whatsapp மூலமோ அலுவலக நேரம் தவிர்த்து இதர நேரங்களில் தொடர்பு கொண்டு தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Mentor and Mentee Programme செயல்திட்டத்தின் கீழ் (துவக்காக) வழிகாட்டல் வழங்க திட்டமிடப்பட்டுள்ள பாடப்பிரிவுகள்:-
Engineering (EEE, ECE, CSE, IT, Aero)
MCA
B.Com
M.Sc
தன்னார்வமுள்ள Mentorகள் (இதர காயல் நல மன்றங்களைச் சேர்ந்தவர்களானாலும் சரியே!) தங்கள் துறைக்கு ஏற்ப Menteeகளுக்கு ஆலோசனை வழங்கும் பட்சத்தில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் விரிவாக்கம் செய்யப்படலாம்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மன்னர் B.A.செய்யித் அப்துர்ரஹ்மான்
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
பெங்களூரு காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பெங்களூரு காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |