வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில், காயல் ப்ரீமியர் லீக் க்ரிக்கெட் போட்டிகள் இம்மாதம் 02ஆம் நாளன்று துவங்குகின்றன. போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் முதன்முறையாக ஏல முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் போட்டிகள் வருகின்ற மே:2-ம் தேதி காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் 8 அணிகள் பங்குபெற உள்ளன. வழமையாக ஒவ்வொரு அணியில் பங்குபெறும் வீரர்களும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இம்முறை வீரர்களின் திறமை மற்றும் முன்அனுபவம் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு, ஏலம் நடத்தப்பட்டது.
இதில் மிகுந்த உற்சாக்துடன் பங்குபெற்ற அணியின் உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தாங்கள் விரும்பிய வீரர்களை அதிக புள்ளிகள் கொடுத்து தமது அணிக்கு எடுப்பதில் ஆர்வம் காட்டினார்கள். ஒவ்வொரு அணிக்கும் 12 வீரர்களை தேர்வு செய்வதற்காக 675 புள்ளிகள் வழங்கப்பட்டன. இரண்டு வீரர்களை மட்டுமே 80 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளில் ஏலம் எடுக்கலாம் என்றும், ஏனைய வீரர்களை 75 புள்ளிகள் வரை அதிகபட்சமாக ஏலம் கோரலாம் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.
இதில் அதிகபட்சமாக 200 புள்ளிகளுக்கு காட்டுதைக்கா தெருவைச் சேர்ந்த K.யாஸீன் ஹனீஃபா என்ற வீரரும், அடுத்த அதிகபட்சமாக 175 புள்ளிகளுக்கு கோமான் அர்ஷத் என்ற வீரரும், மூன்றாவது அதிகபட்சமாக 150 புள்ளிகளுக்கு தீவுத்தெரு இஸ்மாயில் என்ற வீரரும் எடுக்கப்பட்டனர்.
ஏலங்கள் கடந்த 19-ம் தேதி நடைபெற்று அணிகள் இறுதி செய்யப்பட்டன. நாளை மறுநாள் (02/05) வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 5-வது ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் துவங்க உள்ளன. இதன் துவக்க போட்டியில் காயல் யூனைடெட் அணியும், நார்வே நைட்ரைடர்ஸ் அணியும் விளையாட உள்ளன.
ஏலம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தொகுப்பை, https://www.youtube.com/watch?v=9PvR6md43qA&feature=youtu.be என்ற இணையதள பக்கத்தில் காணலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர்
வி-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |