மின் ஆளுமை மூலம், மாணவர்களுக்கான சாதி, இருப்பிடம், முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை அனைத்து மாணவர்களும் இலகுவாகவும், விரைவாகவும் பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, முதல் பட்டதாரி சான்று உள்ளிட்ட சான்றுகளை ஆன்லைனில், மின் ஆளுமை மூலமாக வழங்கப்பட்டு, இம்மாவட்டம் ஒரு முழுமையான மின் ஆளுமை மாவட்டமாக செயல்பட்டு கொண்டு வருகிறது.
மேற்படி சான்றுகள் பெறுவதற்காக பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களை நாடி செல்ல வேண்டிய நிலையில்லாமல், தற்பொழுது இந்த மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 109 “பொது சேவை மையங்கள்” மூலமாக சான்றுகளை ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து குறைந்தபட்சம் 3 தினங்களில் விண்ணப்பித்த அதே பொது சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேற்படி பொது சேவை மையங்கள், கூட்டுறவு சங்கங்களாலும், புதுவாழ்வுத்திட்ட கிராம வறுமை ஒழிப்புக்குழுக்களாலும் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்பொழுது ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தொழிற்கல்வி படிப்புகளுக்கும், மேற்கல்வி படிப்புகளுக்கும் மாணவர்களுக்கு தேவைப்படும் சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, முதல் பட்டதாரி சான்று உள்ளிட்ட சான்றுகளை ஆன்லைனில், மின் ஆளுமை மூலமாக உடனடியாக வழங்க அனைத்து வட்டாட்சியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பெற்றோர்களும், மாணவர்களும் தங்கள் பகுதிகளின் அருகிலுள்ள மின் ஆளுமை “பொது சேவை மையங்களைத்” தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
பொது சேவை மையங்கள் செயல்படும் கிராமங்கள் / இடங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களும், மாணவர்களும் இந்த பட்டியல் விபரங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரது முகநூல் (Collector, Thoothukudi – Face Book) இணைய தளம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட இணைய தளம் (www.thoothukudi.tn.nic.in) ஆகியவற்றிலும் தெரிந்து கொள்ளலாம்.
பொதுச்சேவை மையங்கள் செயல்படும் கிராமங்கள் / இடங்கள் அடங்கிய பட்டியல்:-
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |