வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில், காயல் ப்ரீமியர் லீக் க்ரிக்கெட் போட்டிகள் இன்று (மே 02) துவங்கின. துவக்கப்போட்டியில், காயல் யுனைட்டெட், ஃபை ஸ்கை பாய்ஸ், கே.டி.என்., வாவு வாரியர்ஸ் அணிகள் வென்றுள்ளன.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் : கிரிக்கெட் போட்டிகள் துவங்கின!
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் ஐந்தாம் ஆண்டு காயல் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இன்று காலை 8 மணியளவில் காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தில் துவங்கின. இப்போட்டிகளை வாவு வஜிஹா வனிதயர் கல்லூரியின் நிறுவன தலைவரும், காயல்பட்டினம் நகராட்சியின் முன்னால் தலைவரும், காயல் ஸ்போர்டிங் கிளப்பின் தலைவருமான அல்ஹாஜ் வாவு S.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
இன்றைய முதல் போட்டி துவங்குவதற்கு முன்பாக, ஆட்ட வீரர்களை அல்ஹாஜ் வாவு S.செய்யது அப்துர்ரஹ்மான், வாவு வஜிஹா வனிதயர் கல்லூரியின் செயலர் ஜனாப்.வாவு M.M.மெஹூதஜிம், காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தின் நிர்வாககுழு உறுப்பினர் ஜனாப்.ஃபஸூலுல் ஹக், வீ-யூனைடெட் குழுமத்தின் ஜனாப். செய்யது அஹமது ஆகியோர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
பின்னர் துவங்கிய முதல் போட்டியில் நார்வே நைட்ரைடர்ஸ் அணியை எதிர்த்து, காயல் யூனைடெட் அணி விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த நார்வே நைட்ரைடர்ஸ் அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை எடுத்திருந்தனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக உமர் 31 ரன்களை சேர்த்திருந்தார். காயல் யூனைடெட் அணிக்காக முஃபீத் 2 விக்கெட்டுகளையும், ரஸூல் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த காயல் யூனைடெட் அணியினர் 8 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டினர். அந்த அணிக்காக அதிகபட்சமாக ஷாஹூல் 22 ரன்களை சேர்த்தார். நார்வே நைட்ரைடர்ஸ் அணிக்காக உமர் 2 விக்கெட்டுகளையும், சதக்கதுல்லாஹ் 3 விக்கெட்டுகளையும், அப்துல்லாஹ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இரண்டாவது போட்டியில் Fi-Sky Boys அணியினரும், காயல் ராக்கர்ஸ் அணியினரும் விளையாடினார்கள். முதலில் பேட்டிங் செய்த காயல் ராக்கர்ஸ் அணியினர் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களை எடுத்திருந்தனர். அந்த அணிக்காக அர்ஷத் 35 ரன்களையும், கமால் 23 ரன்களையும் சேர்த்திருந்தனர். Fi-Sky Boys அணிக்காக முஹம்மது தம்பி மற்றும் ஜஹாங்கிர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த Fi-Sky Boys அணியினர் 8.1 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். அந்த அணிக்காக இஜாஸ் 20 ரன்களையும், புஹாரி 11 ரன்களையும், அபுல்ஹஸன் 55 ரன்களையும் சேர்த்தனர். காயல் ராக்கர்ஸ் அணிக்காக ஆதம் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
மூன்றாவது போட்டியில் KTN அணியினரை எதிர்த்து, Allcom அணியினர் விளையாடினார்கள். முதல்ல பேட்டிங் செய்த KTN அணியினர் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை எடுத்திருந்தனர். அந்த அணிக்காக பசீர் 35 ரன்களையும், முஹம்மது மெய்தீன் (ஹாஜியார்) 21 ரன்களையும் எடுத்திருந்தனர். Allcom அணிக்காக இம்ரான் 3 விக்கெட்டுகளையும், அம்மார் மற்றும் அஷ்ரஃப் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த Allcom அணியினர் 9 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தனர். அந்த அணிக்காக அஸார் 23 ரன்களை சேர்த்தார். KTN அணிக்காக ஹனீஃபா 2 விக்கெட்டுகளையும், ஸஃப்ரின் 3 விக்கெட்டுகளையும், ஸஃபீக் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
நான்காவது போட்டியில் வாவு வாரியர்ஸ் மற்றும் கேளரி பேர்ட்ஸ் அணிகள் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த வாவு வாரியர்ஸ் அணியினர் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை சேர்த்திருந்தனர். அந்த அணிக்காக வாவு மொஹூதும் 84 ரன்களை சேர்த்தார். கலாமீஸ் யாஸர் இரண்டு விக்கெட்டுகளையும், காழிஅலாவுத்தீன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த கேளரி பேர்ட்ஸ் அணியினர் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தனர். அந்த அணிக்காக செய்யது இப்றாஹீம் 17 ரன்களையும், அப்துல் ஹமீது 31 ரன்களையும் சேர்த்திருந்தனர். வாவு வாரியர்ஸ் அணிக்காக இஸ்ஸத்தீன் 2 விக்கெட்டுகளையும், ஜூமானி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
வி-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |