மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கிடையே மாபெரும் மாற்றத்திற்கு வித்திடும் முயற்சியாக ‘நாம் யார்? - எண்ணங்களின் புரட்சி’ என்ற நிகழ்ச்சி, புளியங்குடி எஸ்.வீராச்சாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை (மே 03) நடைபெறுகிறது. “இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இலவச பேருந்துகள் இயக்கப்படுகின்றன” என, இதை நடத்தும் எஸ்.வி.சி. குழும செயல் இயக்குநர் எம்.விக்னேஷ் தெரிவித்தார்.
திருநேல்வேலியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:-
மாணவர் - பெற்றோர் - ஆசிரியர்களுக்கு இடையே உள்ள உறவை மேம்படுத்துதம் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மாணவர் திட்டியதால் ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், முதல்வரை மாணவர்கள் கொலை செய்த சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன.
இப்பிரச்சினையிலிருந்து விடுபட, மாணவர்களை பள்ளியிலிருந்தே பயிற்சியளித்துக் கொண்டு வர வேண்டும். இதை உணர்த்தவே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, தேனி ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய ஆடைகள்
நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். இதில் பங்கேற்க வசதியாக பல்வேறு பகுதிகளிலிருந்துமத் பேருந்துகள் ஏற்பாடு செய்துள்ளோம். சனிக்கிழமை மாலை 4 மணிக்குத் துவங்கி, இரவு 8 மணி வரையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்போர் அனைவரும் பாரம்பரிய உடையுடன் பங்கேற்க வேண்டும்.
சிறப்புப் பேச்சாளர்களும், முக்கிய விருந்தினர்களும் வேட்டி, சட்டை அணிந்து வருவர். பாரம்பரிய சமையல், உணவு பதார்த்தங்கள் பரிமாறப்படும். தொடர்புக்கு: 88835 77533, 88835 77633.
இவ்வாறு, இந்நிகழ்ச்சியை நடத்தும் எஸ்.வி.சி. குழும செயல் இயக்குநர் எம்.விக்னேஷ் தெரிவித்தார்.
நிகழ்விடம் செல்ல, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து காலை 11.00 மணிக்கு இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. |