அனுமதியற்ற மனைப் பிரிவுகள் தொடர்பாக, காயல்பட்டினம் நகராட்சி ஆணையரின் அறிவிப்பைக் கொண்ட அறிவிப்புப் பலகைகள், காயல்பட்டினம் நகராட்சி அலுவலக வளாகம், பேருந்து நிலையம், எல்.எஃப்.வீதி உள்ளிட்ட இடங்களில் நிறுவப்பட்டுள்ளது:-
2. Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[02 May 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 34695
இந்நகராட்சி எல்கைக்குட்ப்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாத மனைகளை விற்பதும், வாங்குவதும் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் 1920 பிரிவு 175 முதல் 178 வரையிலான விதிகளின்படி குற்றமாக இருந்தாலும் இவ்விடத்தில் கட்டிட அனுமதிக்காக நகராட்சியால் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கட்டிட அனுமதி கோரிக்கை மறுக்கபடாமல் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு (சாலை - குடிநீர் - மின் இணைப்பு)அணைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க முடியும் என்பதை மறைமுகமாக நகரின் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்வது போல் உள்ளது..!
இவர்கள் உண்மையிலேயே யோக்கியர்களாக இருப்பார்களேயானால் நகராட்சி சார்பாக மனை பிரிவு அனுமதி இல்லாத நிலத்திற்கு மனைபிரிவுக்கு பத்திர பதிவு செய்து கொடுக்க வேண்டாம் என நகரிலுள்ள பத்திர பதிவு அலுவகத்திற்கு நகராட்சியால் அறிவுறுத்தப்பட்டு அறிக்கை - கடிதம் கொடுத்திருக்க வேண்டும்..! கொடுத்தீர்களா..? என்று கேள்வி எழுமானால் நகராட்சியின் தரப்பில் மவுனமே பதிலாக வரும்..!
நகரிலுள்ள சூழ்நிலைகளை கண்டறிந்து தனது வருவாயை பெருக்கிக்கொள்ள நகராட்சியின் ஊழியர்களால் அமைக்க பட்ட சுயநலத்தின் அறிவிப்பு பலகை இது..!
குறிப்பு:- ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது - நாம் யாவரும் இச்செய்தியின் மூலம் அறிகிறோம் அல்லவா..! மே - ஜூன் - ஜுலை இந்த மூன்று மாதங்களையும் கடந்து விடுவோம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் "2014 மே 1ஆம் தேதி முதல் 2014 ஜுலை 31ஆம் தேதி வரை" கட்டிடம் அனுமதி கோரிக்கைக்காக காயல்பட்டினம் நகராட்சியால் (BUILDING PLAN APPROVAL) விண்ணபங்கள் பெறப்பட்டு எத்தனை விண்ணப்பங்களுக்கு கட்டிடம் அனுமதி வழங்கப்பட்டது..? என்ற கேள்வியை (கட்டிட அனுமதிக்காக அனுமதி மறுக்கப்பட்டு நகராட்சியால் அலைக்கழிக்க போடுவோர்) 10 ரூபாய் நீதி மன்ற வில்லையை (STAMP) இணைத்து RTI 2005 - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மனு விண்ணப்பித்து பாருங்கள் 30 நாளில் அல்லது அதிக பட்சம் 60 நாளில் நகராட்சியின் பொது தகவல் அதிகாரியின் பதில் மூலம் அணைத்து பூனை குட்டிகளும் வெளியே வரும்..!
நகர் மக்கள் மத்தியில் RTI act 2005 மற்றும் தனி மனிதன் மாவட்ட ஆட்சியர் முன் நேரடியாக MONDAY பெட்டிசன் - என்றால் என்ன அதன் விழிப்புணர்வு அவசிமாகிறது. அது இல்லாது வரை அநியாயமாக மிக மிக கூடுதலான எதிர்ப்பார்ப்பு நகராட்சியில் தொடரத்தான் செய்யும்..!
கட்டிட அனுமதி மறுப்பாவது..! கத்திரிக்காயாவது...! நகராட்சி நிர்வாகமே இந்த மாதிரி அறிவிப்பு பலகை எல்லாம் நிறுவி காமடி பண்ணாதீர்கள்..! எம்மக்கள் நகராட்சிக்கு வருவார்கள் தருவார்கள் பெறுவீர்கள் வேலை முடியும்.. மனை பிரிவு சட்டமாவது அதன் அனுமதியாவது... போங்க சார் காமடி பண்ணாதீங்க..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross