காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவில் அமைந்துள்ள கற்புடையார் பள்ளி வளாகத்தில் அடங்கியிருக்கும் மஹான்களான செய்யித் அபூபக்கர் ஸித்தீக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, கதீஜா உம்மாள் ரஹ்மத்துல்லாஹி அலைஹா ஆகியோர் நினைவு கந்தூரி நிகழ்ச்சிகள், இம்மாதம் 12, 13, 14 நாட்களில் (சனி, ஞாயிறு, திங்கள்) நடைபெற்றன.
மூன்று நாட்களிலும் அதிகாலையில் கத்முல் குர்ஆன் மஜ்லிஸ், கற்புடையார் பள்ளி இமாம் அரபி எஸ்.எச்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்றது. மூன்று நாட்களிலும் இரவு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் யாஸர் அரஃபாத் மஹ்ழரீ முதல் நாளன்றும், மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ இரண்டாம் நாளன்றும் உரை நிகழ்த்தினர்.
கந்தூரி நாளான ஏப்ரல் 14 திங்கட்கிழமையன்று, அஸ்ர் தொழுகைக்குப் பின் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. மஃரிப் தொழுகைக்குப் பின், சிறிய குத்பா பள்ளியின் முஅத்தின் பிரபு தாஹா தலைமையில் - ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
இஷா தொழுகைக்குப் பின், மஹான்களின் வாழ்க்கைச் சரித சொற்பொழிவு நடைபெற்றது. மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வரும், தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயுமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ சிறப்புரையாற்றினார்.
துஆ, ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. நிகழ்ச்சிகள் யாவற்றிலும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், கந்தூரி விழாக்குழு தலைவர் எச்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன், செயலாளர் எம்.எம்.அப்துல் அஜீஸ், பொருளாளர்களான எஸ்.ஏ.முஹம்மத் உமர் ஸாஹிப், வி.எஸ்.எச்.பஸ்லுல் ஹக் மற்றும் கந்தூரி கமிட்டியினரான ஏ.என்.எம்.அப்துல் காதிர், ஏ.கே.பாதுல் அஸ்ஹப், டி.எம்.ஆர்.மர்ஸூக், வி.எஸ்.முஹம்மத் முஸ்தஃபா, கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், எம்.ஒய்.முஹ்யித்தீன் பிச்சை ஆகியோர் செய்திருந்தனர். |