இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடப்பு ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 வியாழக்கிழமையன்று (நாளை) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
தேர்தல் பரப்புரைகள் இம்மாதம் 22 அன்று 18.00 மணியுடன் நிறைவடைந்தது.
ஏப்ரல் 24 வியாழக்கிழமை (இன்று) தேர்தல் நாளாகும். வாக்குப்பதிவு இன்று 07.00 மணிக்குத் துவங்கி, 18.00 மணிக்கு முடிவுறும்.
காயல்பட்டினத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும், இன்று காலையில் வாக்குப்பதிவு நேரம் துவங்கியதிலிருந்தே பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.
தேர்தலையொட்டி இன்று காயல்பட்டினம் வருகை தந்த அவர், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டார். அவருடன், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் ஆம் ஆத்மி முதன்மை முகவர் சுபாஷ் பர்னாந்து மற்றும் குழுவினர் இணைந்து வந்திருந்தனர்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 13 லட்சத்து, 8 ஆயிரத்து 296 வாக்காளர்கள் உள்ளனர். இன்று
09.00 மணி நிலவரப்படி, 1 லட்சத்து 48 ஆயிரத்து 333 பேரும் (11.34 சதவிகிதம்),
11.00 மணி நிலவரப்படி, 3 லட்சத்து 97 ஆயிரத்து 534 பேரும் (30.39 சதவிகிதம்),
13.00 மணி நிலவரப்படி, 5 லட்சத்து 86 ஆயிரத்து 738 பேரும் (44.8 சதவிகிதம்),
15.00 மணி நிலவரப்படி, 7 லட்சத்து 56 ஆயிரத்து 316 பேரும் (57.81 சதவிகிதம்),
17.00 மணி நிலவரப்படி, 8 லட்சத்து 38 ஆயிரத்து 953 பேரும் (64.13 சதவிகிதம்)
வாக்களித்துள்ளனர்.
படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
காயல்பட்டினத்திலுள்ள வாக்குச்சாவடிகள், வாக்குச்சாவடிக்குட்பட்ட தெருக்கள், வாக்குச் சாவடி வாரியாக வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் நிரந்தரமாக உள்ளது. அப்பக்கத்தைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பு நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |