இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல்கள் இன்று தமிழகத்தில் நடைபெறுகின்றன. இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்கு பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறும்.
நாடு முழுவதும் - தேர்தல் ஆணையம் - வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்த பெருத்த முயற்சியை எடுத்தது. விறுவிறுப்பான பிராசாரங்களின் முடிவில் நடைபெறும் இத்தேர்தலில் - தூத்துக்குடி தொகுதியில் உள்ள காயல்பட்டினம் பகுதியில் வாக்குபதிவு எவ்வாறு இருக்கும்?
1999ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் - காயல்பட்டினத்தில் 52.37 சதவீத வாக்குகளே பதிவாகின (மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 26,354).
அதனை தொடர்ந்து - 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் - காயல்பட்டினத்தில் 49.05 சதவீத வாக்குகளே பதிவாகின.
2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தல் 58.70 சதவீத வாக்குகள் பதிவாகின.
2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காயல்பட்டினத்தில் 55 சதவீத வாக்கு பதிவு நடைபெற்றது.
2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குபதிவு சதவீதம் சற்றே உயர்ந்தது. 66.69 சதவீத வாக்காளர்கள் (15,441) நகரில் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.
2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் - சுமார் 59.20 சதவீத வாக்குகள் பதிவாகின.
2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் - வாக்குப்பதிவு சதவீதம் 57 என்ற அளவில் இருந்தது.
2009ம் ஆண்டு நகர நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு காட்சிகள்
அதனை தொடர்ந்து 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் - மொத்த வாக்காளர்களான 28,313 வாக்காளர்களில், 19,435 பேர் (68.64 சதவீதம்) வாக்களித்தனர்.
2011ம் ஆண்டு நகர சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு காட்சிகள்
2011 அக்டோபரில் நடைபெற்ற உள்ளாட்சிமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் 63.53.என்ற அளவில் இருந்தது.
தற்போதைய காயல்பட்டினம் வாக்காளர்கள் விபரம்:
ஆண்கள் - 15,340
பெண்கள் - 15,886
மொத்தம் - 31,226
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 4:30 pm / 24.04.2014]
|