ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீ காயல் நல மன்றத்தின் 21ஆவது செயற்குழுக் கூட்டத்தில், ஷிஃபா அவசர கால மருத்துவ உதவிக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 21ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 11ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலையில், மன்றத்தின் கவுரவ தலைவர் ஹாஜி ஐ.இம்தியாஸ் அஹ்மத் தலைமையில், மன்ற துணைத்தலைவர் மக்பூல் முன்னிலையில், செயற்குழு உறுப்பினர் பி.எம்.ஹுஸைன் நூருத்தீன் இல்லத்தில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
ஷிஃபா அவசர கால மருத்துவ உதவிக்கு நிதியொதுக்கீடு:
ஷிஃபாவின் காலாண்டு அவசர கால மருத்துவ நிதிக்காக, காலாண்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என்ற விகிதத்தில், வருடத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இரங்கல்:
மன்றத்தின் பொதுச் செயலாளர் வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை அவர்களின் சகோதரி ஹாஜ்ஜா வி.எஸ.டி.அஹ்மத் ஆயிஷா, சஊதி அரபிய்யா - புனித மக்கா நகரில் உம்றா செய்துவிட்டு தாயகம் திரும்புகையில் - இம்மாதம் 23.03.2014 ஞாயிற்றுக்கிழமையன்று, ஜித்தாவில் காலமானார். அன்னாரின் மறைவுச் செய்தியறிந்து மன்றத்தினர் மிகுந்த கவலையுற்றோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
கருணையுள்ள அல்லாஹ் அன்னாரின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, நற்கிரியைகள் அனைத்தையும் ஏற்று, ஈருலக நற்பேறுகளை நிறைவாக வழங்கிட மன்றம் பிரார்த்திப்பதுடன், அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள இக்கூட்டம் பிரார்த்தித்து, ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து, ஸலாமுரைக்கிறோம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அடுத்த செயற்குழு:
மன்றத்தின் அடுத்த (22ஆவது) செயற்குழுக் கூட்டத்தை, வரும் மே மாதம் 09ஆம் நாள் வெள்ளிக்கிழமை அஸ்ர் தொழுகைக்குப் பின் நடத்தப்படும் என கூட்டத் தலைவர் அறிவித்ததையடுத்து, துஆ - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் செய்தித் துறை பொறுப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
அபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய (19ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 12:22 / 23.04.2014] |