இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடப்பு ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 வியாழக்கிழமையன்று (நாளை) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
தேர்தல் பரப்புரைகள் இம்மாதம் 22 அன்று 18.00 மணியுடன் நிறைவடைந்தது.
ஏப்ரல் 24 வியாழக்கிழமை (நாளை) தேர்தல் நாளாகும். வாக்குப்பதிவு நாளை 07.00 மணிக்குத் துவங்கி, 17.00 மணி வரை நடைபெறும்.
நாளை வாக்குப்பதிவை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் 34 வாக்குச்சாவடிகளில் ஆயத்தப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வாக்குச் சாவடி எல்லை நிர்ணயிக்கப்பட்டு, தடைக்கோடுகள் வரையப்பட்டுள்ளன.
வாக்குச் சாவடிகளில், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது கட்சி - சின்னங்களின் பட்டியல், இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை, வாக்களிக்க வேண்டியதன் அவசியம், வாக்குச் சாவடிக்குட்பட்ட பகுதிகளின் விபரங்கள் உட்பட - வாக்காளர் தகவலுக்காக பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அலுவலர்களுடன் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
காயல்பட்டினத்திலுள்ள வாக்குச்சாவடிகள், வாக்குச்சாவடிக்குட்பட்ட தெருக்கள், வாக்குச் சாவடி வாரியாக வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் நிரந்தரமாக உள்ளது. அப்பக்கத்தைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பு நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, காயல்பட்டினம் வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |