காயல்பட்டினம் கே.டீ.எம். தெரு தென்முனையில் அமைந்துள்ளது தாயிம்பள்ளி.
நிர்வாகம்:
எஸ்.டீ.வெள்ளைத்தம்பி பள்ளியின் தலைவராகவும், ஏ.கே.யாஸீன் மவ்லானா துணைத்தலைவராகவும், ஹாஜி எம்.அஹ்மத் செயலாளராகவும், கே.எம்.தவ்லத் பொருளாளராகவும் சேவையாற்றி வருகின்றனர். எம்.எச்.ஷம்சுத்தீன் தலைமையில், நடப்பாண்டு கஞ்சி கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது.
இமாம் - முஅத்தின் - தராவீஹ் இமாம்கள்:
இப்பள்ளியில், காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்த எஸ்.எல்.அஹ்மத் காஸிம் இமாமாகவும், சுலைமான் நகரைச் சேர்ந்த எஸ்.ஷம்ஸ் அலியார் முஅத்தினாகவும் பணியாற்றி வருகின்றனர்.
ரமழான் தராவீஹ் தொழுகையில் முழு குர்ஆனும் ஓதி முடிக்கப்படுகிறது. நடப்பாண்டு தராவீஹ் தொழுகையை, (1) கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த டூட்டி காஜா என்பவரின் மகன் ஹாஃபிழ் அப்துர் ரஸ்ஸாக், (2) சொளுக்கார் தெருவைச் சேர்ந்த அபூ மீராஸாஹிப் என்பவரின் மகன் ஹாஃபிழ் ஏ.எம்.எஸ்.மஹ்மூத் மஃபாஸ், (3) காயிதேமில்லத் நகரைச் சேர்ந்த சாமு ஷிஹாபுத்தீன் என்பவரின் மகன் ஹாஃபிழ் அபூ ஹனீஃபா ஆகியோர் பொறுப்பேற்று வழிநடத்தி வருகின்றனர்.
இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி:
இப்பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், 27.06.2015 அன்று பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
இஃப்தார் நிகழ்ச்சியில் நாள்தோறும் 150 முதல் 200 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
ஏற்பாட்டுக் குழு:
நடப்பாண்டு கஞ்சி ஏற்பாடு உள்ளிட்ட ரமழான் சிறப்பேற்பாடுகளுக்கு, ஏ.கே.யாஸீன் மவ்லானா தலைவராகவும், எம்.எச்.ஷம்சுத்தீன் பொருளாளராகவும், கே.எம்.தவ்லத், பெய்ண்டர் சாவன்னா, எஸ்.எம்.கே.முஹ்யித்தீன், மூனா மீராஸாஹிப் ஆகியோர் பொறுப்பாளர்களாகவும் குழுவினராகவும் பொறுப்பேற்று சேவையாற்றி வருகின்றனர்.
தகவல்:
S.M.K.முஹ்யித்தீன்
தாயிம்பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடைபெற்ற நோன்புக் கஞ்சி வினியோகம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தாயிம்பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்திகளைக் காண பின்வரும் இணைப்புகளில் சொடுக்குக!
தாயிம்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு நகர பள்ளிகளின் இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |