ரமழான் 1436: ஐ.ஐ.எம். சார்பில் ஃபித்ரா ஸதக்கா கூட்டு முறையில் வினியோகிக்க ஏற்பாடு! ஒருவருக்கு ரூ.150 என தொகை நிர்ணயம்!!
காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில், ஏழை மக்களுக்கான ஃபித்ரா உணவுப் பொருட்களை, வழமை போல இவ்வாண்டும் ஒருங்கிணைந்த முறையில் வினியோகம் செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அரிசி, சீனி, ஜவ்வரிசி, மைதா மாவு, தேங்காய், எண்ணெய், மசாலா பொருட்கள் உள்ளிட்ட சமையற்பொருட்களும், கோழி இறைச்சியும் ஏழைகளுக்கு வினியோகம் செய்யப்படவுள்ளது.
பொதுமக்களிடமிருந்து ஃபித்ரா ஸதக்கா - தர்மப் பணமாக நபர் ஒருவருக்கு ரூபாய் 150 என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள பொதுமக்கள் தமது ஃபித்ரா ஸதக்கா தொகையை, அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளரான “ஜெய்ப்பூர்” முஹ்யித்தீன் (தொடர்பு எண்: +91 93605 09897) என்பவரிடம் வழங்கி, ரசீது பெற்றுக்கொள்ளுமாறு, ஐ.ஐ.எம். நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல்:
S.L.ஷாஹுல் ஹமீத் (சாவன்னா)
M.A.அப்துல் ஜப்பார்
ஐ.ஐ.எம். நிர்வாகத்தின் சார்பில், கடந்த ஆண்டு (ஹிஜ்ரீ 1435) ஏழைகளுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் வினியோகிக்கப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐ.ஐ.எம். தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |