காயல்பட்டினம் நெய்னார் தெரு வட பகுதியில் கீழ் திசையில் அமைந்துள்ளது மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் என்ற பெயருடைய ஸெய்யிதினா பிலால் பள்ளிவாசல்.
இப்பள்ளியில் ஹாஜி கே.டி.ஸதக்கத்துல்லாஹ் இப்பள்ளியின் தலைவராகவும், பேராசிரியர் ஹாஜி கே.எம்.எஸ்.சதக்கு தம்பி துணைத்தலைவராகவும், ஹாஜி எம்.ஏ.ஸெய்யித் செயலாளராகவும், மவ்லவீ பி.எம்.ஆர்.முஹம்மத் இஸ்மாஈல் மஹ்ழரீ பொருளாளராகவும் பொறுப்பேற்று சேவையாற்றி வருகின்றனர்.
01.03.2009 அன்று திறக்கப்பட்ட இப்பள்ளியில், காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ இமாமாகவும், ரமழான் தராவீஹ் சிறப்புத் தொழுகைக்கான இமாமாகவும் கடமையாற்றி வருகிறார். காயல்பட்டினத்தைச் சேர்ந்த அரபி ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ பள்ளியின் பிலாலாக கடமையாற்றி வருகிறார்.
ஆண்டுதோறும் ரமழான் மாதங்களில் இஃப்தார் - நோன்பு துறப்பு ஏற்பாடுகள், தராவீஹ் சிறப்புத் தொழுகை, அதனைத் தொடர்ந்து வித்ரிய்யா மஜ்லிஸ் நடத்தப்பட்டு வருகிறது.
ரமழான் மாதத்தின் அனைத்து நாட்களிலும் இப்பள்ளியில் கறி கஞ்சி மட்டுமே தயாரித்து பரிமாறப்பட்டு வருகிறது. நடப்பாண்டு நோன்புக் கஞ்சி மற்றும் ரமழான் சிறப்பு ஏற்பாடுகள் அனைத்திற்குமான ஒரு நாள் செலவாக ரூபாய் 15,000 தொகை உத்தேசமாக செலவழிக்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் ஊற்றுக் கஞ்சி வினியோகிக்கப்படுவதில்லை. இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, இரு வகை வடை, பஃப்ஸ் அல்லது மட்டன் ப்ரெட் ஸ்டஃப், அவ்வப்போது குளிர்பானம், அவ்வப்போது கேக் என பலவகை பதார்த்தங்கள் பள்ளி துவங்கப்பட்ட காலம் முதல் பரிமாறப்பட்டு வருகிறது.
இங்கு நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், பள்ளி ஜமாஅத்தார் தவிர, இப்பகுதியில் டியூஷன் படிப்பிற்காக வரும் ஏராளமான மாணவர்களும், பல வகை பதார்த்தங்களால் ஆர்வப்பட்ட சிறுவர் பலரும் என தினமும் 100 முதல் 150 பேர் வரை பங்கேற்று வருகின்றனர்.
இப்பள்ளியில், 28.06.2016. அன்று மாலை நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
ஸெய்யிதினா பிலால் பள்ளியில் ஹிஜ்ரீ 1433ஆம் ஆண்டு நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஸெய்யிதினா பிலால் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஸெய்யிதினா பிலால் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|