காயல்பட்டினம் கி.மு.கச்சேரி தெருவில் அமைந்துள்ளது - ஷாதுலிய்யா தரீக்காவின் தலைமைக் கேந்திரமான ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா.
[படங்கள்: கோப்பு]
நிர்வாகம்:
ஜாவியா தலைவராக ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் நூஹ், துணைத்தலைவராக ஹாஃபிழ் எம்.எஸ்.முஹம்மத் மரைக்கார், செயலாளராக எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ், துணைச் செயலாளராக ஹாஃபிழ் எம்.ஏ.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் நிர்வாகச் சேவையாற்றி வருகின்றனர்.
இமாம் - முஅத்தின் - தராவீஹ் இமாம்:
இங்கு நடைபெறும் ஐவேளைத் தொழுகையை, ஜாவியா அரபிக்கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.எஸ்.மாமுனா லெப்பை ஃபாஸீ இமாமாகவும், கோமான் தெருவைச் சேர்ந்த முஹம்மத் இஸ்மாஈல் முஅத்தினாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியில் ரமழான் தராவீஹ் தொழுகையில் திருமறை குர்ஆன் முழுமையாக ஓதி முடிக்கப்படுகிறது. ஜாவியா அரபிக்கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு மாணவர்கள் தொழுகையை வழிநடத்துகின்றனர்.
இஃப்தார் நிகழ்ச்சி:
இங்கு ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு நோன்புக் கஞ்சி உள்ளிட்ட ரமழான் சிறப்பேற்பாடுகளுக்கு, எஸ்.ஜெ.இப்றாஹீம் கலீல், எஸ்.எச்.ஷெய்க் அப்துல் காதிர், எம்.எஸ்.மாமுனா லெப்பை ஆகியோர் பொறுப்பேற்று சேவையாற்றி வருகின்றனர்.
நடப்பாண்டில், 17.06.2016. அன்று பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
இஃப்தார் நிகழ்ச்சியில் நாள்தோறும் 25 முதல் 50 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
இங்கு, நோன்புக் கஞ்சிக்காகவும் முன்னோர்களால் சொத்துக்கள் சில வக்ஃப் செய்யப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து பெறப்படும் வருமானத்தைக் கொண்டு குறிப்பிட்ட சில நாட்களுக்கு கஞ்சி தயாரிக்கப்படுகிறது.
வெண்கஞ்சி அருகி வரும் இக்காலகட்டத்திலும், இங்கு அவ்வப்போது துவையலுடன் வெண்கஞ்சி பரிமாறப்படுவது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ரமழான் மாதத்தில் நாள்தோறும் இஷா தொழுகை 21.00 மணிக்கும், தராவீஹ் தொழுகை 21.15 மணிக்கும் துவங்குகிறது.
ஜாவியாவில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஜாவியாவின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்திகளைக் காண இங்கே சொடுக்குக!
ஜாவியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு நகர பள்ளிகளின் இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|